திமுக 40 தொகுதிகளில் ஜெயிப்பது உறுதி... அந்த சென்டிமென்ட்!!!

By vinoth kumarFirst Published Dec 16, 2018, 1:27 PM IST
Highlights

2019-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதுக்கு நாற்பதையும் வெல்வோம் என்று திமுகவினர் சென்டிமென்ட் கதை சொல்லி வருகிறார்.

திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக சென்டிமென்ட் செய்தி வெளியாகியுள்ளது. அதில் 2004-ம் ஆண்டு காமராஜர் சிலைத் திறப்பு விழாவுக்கு வந்த சோனியாகாந்தி அறிவாலயத்தில் கருணாநிதியைச் சந்தித்து நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம் போட்டார். அந்த திமுக-காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான் நாற்பதுக்கு நாற்பதையும் தொகுதிகளையும் அள்ளியது. இதில் அதிமுக-பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. 

இதனை மனத்தில் வைத்துக்கொண்டே அதேபோல் இப்போது கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு சோனியாகாந்தி வருகிறார். அப்போது கூட்டணி தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பேசப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதுக்கு நாற்பதையும் வெல்வோம் என்று திமுகவினர் சென்டிமென்ட் கதை சொல்லி வருகிறார். ஆனாலும் தொகுதி பங்கீட்டில் திமுக கட்சி தொடர்ந்து கறார் காட்டி வருகிறது. 

ஆனால் 5 மாநில தேர்தல் முடிவுக்கு முன்பு நிலைமை அப்படி இருந்தது. ஆனால் இப்போது தலைகீழாக மாறியுள்ளது. தேர்தல் முடிவு தங்களுக்குச் சாதகமாகியிருப்பதால், இனி காங்கிரஸ் அழுத்தம் கொடுக்கும். அதனால் கருணாநிதி பாலிஸியைக் கையில் எடுக்க ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு இரண்டை இலக்கத்தில் தொகுதியை ஒதுக்கீடு செய்துவிட்டு, அவர்களையே கூட்டணிக் கட்சிகளையும் கவனித்துக்கொள்ளும் திட்டத்தைச் செயல்படுத்த நினைப்பதாக திமுக தரப்பில் பேசப்பட்டு வருகிறது. 

click me!