அ.தி.மு.கவில் தினகரன் ஆதரவு குரல்! டென்சன் ஆன ஓ.பி.எஸ்!

By Asianet TamilFirst Published Aug 31, 2018, 12:11 PM IST
Highlights

.பி.எஸ் நேற்று திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தரிசனத்தை முடித்துவிட்டு அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் சகிதமாக செய்தியாளர்களை சந்தித்தார். .பி.எஸ்க்கு ஒரு புறம் உதயகுமாரும் மறுபுறம் செல்லூர் ராஜூவும் நின்று கொண்டிருந்தனர்.

அ.தி.மு.கவில் தினகரனுக்கு ஆதரவாக குரல் எழுந்துள்ளது பற்றிய கேள்விக்கு துணை முதலமைச்சரும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி.எஸ் செய்தியாளர்களிடம் டென்சன் ஆனார்.

   ஓ.பி.எஸ் நேற்று திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தரிசனத்தை முடித்துவிட்டு அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் சகிதமாக செய்தியாளர்களை சந்தித்தார். ஓ.பி.எஸ்க்கு ஒரு புறம் உதயகுமாரும் மறுபுறம் செல்லூர் ராஜூவும் நின்று கொண்டிருந்தனர். எடுத்த எடுப்பிலேயே அமைச்சரவை மாற்றம் என்று செய்தி வருவது குறித்து ஓ.பி.எஸ்சிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சரவை மாற்றம் என்பது முதலமைச்சரின் அதிகாரத்திற்கு உட்பட்டது, அது குறித்து தான் பேச முடியாது என்று ஓ.பி.எஸ் பதில் அளித்தார்.

   தொடர்ந்த திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளில் அ.ம.மு.கவே வெற்றி பெறும் என்று தினகரன் கூறியது பற்றிய கேள்விக்கு, தினகரன் அ.தி.மு.கவை மீண்டும் தனது குடும்பத்திற்குள் திணிக்க முயல்கிறார், அது நடக்காது என்று பதில் அளித்தார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், தினகரனை மீண்டும் அ.தி.மு.கவில் சேர்க்க வேண்டும் என்று சிலர் பேச ஆரம்பித்துள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

   இந்த கேள்வியால் சிறிது ஓ.பி.எஸ் டென்சன் ஆனார். ஆனால் டென்சனை கட்டுப்படுத்திக் கொண்ட ஓ.பி.எஸ்., இது போன்ற கேள்விகளை எல்லாம் என்னிடம் கேட்க வேண்டாம் என்று சற்று கோபமாக கூறினார். மேலும் இந்த வகையான கேள்விகளுக்கு தன்னிடம் எப்போதும் பதில் கிடைக்காது என்றும் அவர் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அ.தி.மு.கவில் தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும் என்கிற குரல் எழுந்துள்ளது குறித்து ஏசியாநெட் தமிழ் கடந்த இரண்டு நாட்களாகவே தெரிவித்து வருகிறது.

   தற்போது ஏசியாநெட் தமிழில் வெளியான செய்திகளை உறுதிப்படுத்தும் வகையிலேயே, தினகரன் அ.தி.மு.கவை மீண்டும் தனது குடும்பத்திற்குள் திணிக்க முயல்வதாக ஓ.பி.எஸ் கூறியுள்ளார். மேலும் தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று எழுந்துள்ள கேள்விக்கும் அப்படி எல்லாம் ஒன்று இல்லை என்று பதில் அளிக்காமல், அது குறித்து தன்னிடம் கேட்க வேண்டாம் என்று கோபமாக கூறிவிட்டு ஓ.பி.எஸ் சென்றுள்ளார்.

   தினகரனை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அ.தி.மு.கவினர் வலியுறுத்த ஆரம்பித்தால் அதனால் முதலில் பாதிக்கப்படுவது ஓ.பி.எஸ் தான். எனவே தான் அவர் அந்த கேள்வியை கேட்ட மாத்திரத்தில் டென்சன் ஆகியுள்ளார்.

click me!