பன்னீர்செல்வம் அரசு ஆலோசகராக நியமனம்?

Asianet News Tamil  
Published : Feb 05, 2017, 05:39 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
பன்னீர்செல்வம் அரசு ஆலோசகராக நியமனம்?

சுருக்கம்

முதலமைச்சராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதையடுத்து நடராஜனின் நெருங்கிய உறவினர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை ஆலோசகராக நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது நம்பிக்கைக்குரிய அரசு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் இரண்டு நாளுக்கு முன்பு வெளியேறினார்.

முதல்வர் ஓபிஎஸ் இருக்கும் வரையில் ஜெயலலிதாவின் ஆலோசகராக  இருந்த பாலகிருஷ்ணன் தனி செயலர்கள் வெங்கட்ராமன், ராமலிங்கம் பதவி விலகும்படி கேட்டுக்கொள்ளபட்டதன் பேரில் வெளியேறினர்.

இந்த நிலையில் முதலமைச்சர் ஓபிஎஸ்சுக்கு ஆலோசகராக யார் வருவார்? அல்லது அந்த பதவி நிரப்பபடாமல் போகுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் முதல்வரே தொடர முடியாது என்ற நிலை இன்று ஏற்பட்டது.

இன்று கூடிய அதிமுக எம்எல்ஏக்கள் கூடத்தில் சசிகலா சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யபட்டார்.

இதையடுத்து விரைவில் முதல்வராக பதவி ஏற்கவுள்ளார்.

பதவி ஏற்கும் சசிகலாவுக்கு சகல விதத்திலும் ஆலோசனை கூற வழிகாட்ட நம்பிக்கைக்குரிய ஒருவரை கார்டன் வட்டாரம் தேர்வு செய்துள்ளது என்று கூறபடுகிறது.

சசிகலாவின் கணவர் எம்.நடராஜனின் நெருங்கிய உறவினரும் முன்னாள் ஓய்வு பெற்ற அதிகாரியுமான பன்னீர்செல்வம் (எ) மன்னை பன்னீர்செல்வம் என்பவரை அரசின் ஆலோசகராக நியமிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் அதற்கான உத்தரவு வரலாம் என்று கோட்டை வட்டாரத்திலும் கூறப்படுகிறது.

ஒரு பன்னீர்செல்வம் போனாலும் இப்போது இன்னொரு பன்னீர்செல்வம் வந்துள்ளதாக கட்சி வட்டாரத்தில் நகைச்சுவையாக பேசப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன்.. சஸ்பென்ஸ் உடைத்த செங்கோட்டையன்..!
'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?