
ஓ. பன்னீர்செல்வத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாஃபா நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
தமிழக மக்களின் குரலுக்கு செவிமடுத்து முடிவெடுக்க போவதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
அதிமுக தரப்பில் இருந்து இதை பேக் ஐடி என்றும் தகவல் பரப்பபட்டது.
இதொ அதோ என இருந்த நிலையில் திடீரென ஓபிஎஸ் வீட்டுக்கே நேரில் வந்தார்.
இந்த நிலையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டுக்கு மாஃபா பண்டியாராஜன் நேரடியாக வந்துவிட்டதால் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.
கே.பி.முனுசாமி நத்தம் விஸ்வநாதன் போன்ற மூத்த நிர்வாகிகள் சாலைக்கே வந்து மாபாவை சந்தித்து அழைத்து சென்றனர்.
சசிகலாவின் நம்பிக்கைக்குரிய மாஃபா பாண்டியராஜனே ஓபிஎஸ்சிடம் ஐக்கியமாகி விட்டதால் கதிகலங்கி போயுள்ளது சசிகலா தரப்பு.
மாஃபா பண்டியரஜனை தொடர்ந்து மேலும் பல எம்எல்ஏக்கள் வர இருப்பதால் தமிழக அரசியல் களம் நிமிடத்துக்கு நிமிடம் சூடு பிடிக்கிறது.
மாஃபா பண்டியராஜனை சசிகலா பெரிதும் நம்பியிருந்த நிலையில் அவர் பல்டி அடித்திருப்பது சசிகலாவை இடிந்து போக செய்துள்ளதாம்.
ஓபிஎஸ்ஸின் அதிரடி ஆட்டங்களை கண்ட பழுத்த அரசியல்வாதிகள் வாய்மேல் விரல் வைத்து ஆச்சர்யபட்டு போயுள்ளனராம்.