பாஜக-வை கடுப்பேற்ற குஜராத்துக்கு கொக்கி போட்ட பா.ரஞ்சித்...! எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு நடிக்க வாய்ப்பு..!

Asianet News Tamil  
Published : Jan 31, 2018, 08:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
பாஜக-வை கடுப்பேற்ற குஜராத்துக்கு கொக்கி போட்ட பா.ரஞ்சித்...! எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு நடிக்க வாய்ப்பு..!

சுருக்கம்

pa ranjith gave cahance to jignesh mevani to act in his film and irritating bjp

நடிகராகிறார் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி ..! குஜராத்துக்கு கொக்கி போட்ட பா.ரஞ்சித்..! பின்னணி என்ன..?

இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது காலா படத்தில் பிசியாக உள்ளார். இதனை தொடர்ந்து அடுத்து இயக்க உள்ள படத்தில்,குஜராத் மாநில வட்கம் தொகுதி எம்எல்ஏ வான ஜிக்னேஷ் மேவானி  நடிக்க உள்ளார்...

அட யார் யாரோ நடிக்கிறாங்க...இவர் நடித்தால் என்ன என பலரும் கேட்பார்கள்...

அதாவது பிரதமர் மோடியின் சொந்த ஊரான குஜராத் மாநிலத்தில், தலித்களுக்கு  ஆதரவாகவும்,பாஜக ஆட்சிக்கு எதிராகவும் பல பரப்புரைகளை மக்களிடேயே கொண்டு சேர்த்தார் ஜிக்னேஷ் மேவானி.இவருடைய பேச்சு மக்களை வெகுவாக கவர்ந்தது.

இதனுடைய எதிரொலியாக, நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில், பாஜக விற்கு  சற்று பின்னடைவு எற்பட்டது. ஆனாலும் பா.ஜ.க தான் ஆட்சியை  கைப்பற்றியது.

அதே வேளையில், ஜிக்னேஷ் மேவானியின் பிரசாரத்தால், மக்கள் காங்கிரஸ் பக்கம்  சாய  ஆரம்பித்தனர்.அதன் விளைவாக, இந்த தேர்தலில் காங்கிரஸ் கூடுதல் இடங்களை  கைபற்றியது என்பது  குறிப்பிடத்தக்கது.

ஆர் .கே .நகர் இடைத்தேர்தல்

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜக நோட்டோ வை விட குறைவாக வாக்குகள் பெற்றது. இதனை கிண்டல் செய்யும் விதமாக,குஜராத்  மாநில வட்கம் தொகுதி எம்எல்ஏ வான  ஜிக்னேஷ்  மேவானி  தனது  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு  சர்ச்சையை  ஏற்படுத்தினார்

பா.ரஞ்சித் கொடுத்த  நடிக்கும் வாய்ப்பு

இந்நிலையில், தலித் மக்களுக்காக  சாதகமா  பேசி, அவர்களுக்காக போராடி வரும், ஜிக்னேஷ்  மேவானிக்கு, இயக்குனர் பா.ரஞ்சித் அவருடைய  படத்தில் நடிக்க  வாய்ப்பு கொடுத்துள்ளார்.

அதாவது தற்போது ரஜினி நடித்து வரும் காலா படம் முடிந்த கையோடு,அடுத்த படத்தை  இயக்க உள்ள  ரஞ்சித், அதில் ஜிக்னேஷ் மேவானியை  கெஸ்ட் ரோல் செய்ய   வைக்க உள்ளார்..

அதாவது  மத்தியில் ஆளும் பாஜக கொண்டு வரும் எந்த திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக மக்கள்,பாஜக விற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தும் ஜிக்னேஷ்  மேவாணியை திரையில் பார்க்க வரவேற்பார்களா ? அல்லது பாஜக வை  பா. ரஞ்சித் கடுப்பேத்துகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கணும்னு  பலரும்  கருத்து தெரிவிக்கின்றார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தமிழ்நாட்டில் பொதுவாகவே சினிமாவில்  இருந்து தான் அரசியலுக்கு வருவார்கள்....ஆனால் குஜராத் ஜிக்னேஷ் அரசியலிருந்து  சினிமாவிற்கு வருகிறார் பாருங்களேன்...

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்க்கும், எனக்கும் வெறும் பங்காளி சண்டை தான்..! மீண்டும் அதிமுக கூட்டணியில் அமமுக.. டிடிவி பளீர்..
ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்..!