சிவகங்கையில் ஒருத்தரும் பட்டினியில் இருக்கக் கூடாது... உணவு தேவைக்கு நாங்க இருக்கோம் என்று ப.சிதம்பரம் ட்வீட்!

By Asianet TamilFirst Published Apr 17, 2020, 9:19 PM IST
Highlights

“சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி அடங்கிய பகுதிகளில் பசி, பட்டினி இருக்கக் கூடாது என்பதில் மாவட்ட நிர்வாகமும், MP யும், MLA க்களும் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்கள் என்று அறிந்து பெருமிதமடைந்தேன். எந்தக் குடும்பத்திலாவது உணவு இல்லையென்றால் எங்களுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டுகிறோம்."

சிவகங்கையில் எந்தக் குடும்பத்திலாவது உணவு இல்லையென்றால் எங்களுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டுகிறோம் என்று முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்திவருகிறார். 65 ஆயிரம் கோடியை ஒதுக்கி ஏழை மக்களுக்கு 5 ஆயிரம் வழங்கினால்கூட போதுமானது என்றும் ப.சிதம்பரம் கூறிவருகிறார். ஆனால், மத்திய அரசு நிவாரண உதவி எதையும் அறிவிக்காததால் மத்திய அரசையும் விமர்சித்துவருகிறார்.
இந்நிலையில் சிவகங்கை தொகுதி மக்களுக்கு உதவிடும் வகையில் ப.சிதம்பரம் அறிவிப்பு ஒன்றை ட்விட்டர் மூலம் வெளியிட்டுள்ளார். அதில், “சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி அடங்கிய பகுதிகளில் பசி, பட்டினி இருக்கக் கூடாது என்பதில் மாவட்ட நிர்வாகமும், MP யும், MLA க்களும் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்கள் என்று அறிந்து பெருமிதமடைந்தேன். எந்தக் குடும்பத்திலாவது உணவு இல்லையென்றால் எங்களுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டுகிறோம். 
அதைப் போல் முதியோர் இல்லங்கள், குழந்தை காப்பகங்கள் போன்ற அமைப்புகளும் அவர்களுடைய உணவுத் தேவைகளை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டுகிறோம். மாவட்ட நிர்வாகமும் நாங்களும் இணைந்து உங்கள் உணவுத் தேவைகளப் பூர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்போம்.” என்று ப.சிதம்பரம்  தெரிவித்துள்ளார்.

click me!