இன்னுமா உங்க ஆத்திரம் தீரல..?? தயவு செஞ்சு ஜாமின் கொடுங்க நீதிமன்றத்தில் கதறும் ப. சி தரப்பு..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 7, 2019, 1:58 PM IST
Highlights

இந் நிலையில் அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.   அதில் சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் மூத்த அரசியல் தலைவரான சிதம்பரத்திற்கு ஜாமீன் கொடுக்காமல் காலநீட்டிப்பு செய்வது வருத்தத்திற்குரியது என்றார்.

ஜாமின் கொடுத்தால் எந்த வெளிநாட்டிற்கும் தப்பிச்செல்ல மாட்டேன், தன்னுடைய பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களையும் ஒப்படைக்க  தயார் என முன்னாள் மத்திய அமைச்சர்  ப. சிதம்பரம் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்,  ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள ப. சிதம்பரம் தன்னுடைய  பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்கத் தயார் என தெரிவித்துள்ளார்.  ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார். இந் நிலையில் அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.   அதில் சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் மூத்த அரசியல் தலைவரான சிதம்பரத்திற்கு ஜாமீன் கொடுக்காமல் காலநீட்டிப்பு செய்வது வருத்தத்திற்குரியது என்றார்.

ப. சிதம்பரம் வெளியே வந்தாள் அவர் எந்த வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல மாட்டார்,  பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களையும் அவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க தயாராக உள்ளார் என்று கூறினார். அத்துடன்,  அவரின் வயது மற்றும் உடல்நிலை கருதி உடனே அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் அவர் வாதாடினார்.  இதைத்தொடர்ந்து அமலாக்கப்பிரிவு வாரம் நடைபெற உள்ளது. 
 

click me!