நீங்க கேட்டத நாங்க கொடுத்தாச்சு... உங்களுக்கு இன்னும் 15 நாள்தான் டைம்...! சசிகலாவுக்கு ஆர்டர் போட்ட விசாரணை ஆணையம்...!

 
Published : Feb 26, 2018, 06:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:00 AM IST
நீங்க கேட்டத நாங்க கொடுத்தாச்சு... உங்களுக்கு இன்னும் 15 நாள்தான் டைம்...! சசிகலாவுக்கு ஆர்டர் போட்ட விசாரணை ஆணையம்...!

சுருக்கம்

Ordering Commission for Sasikala

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 2,956 பக்க ஆவணங்களை சசிகலா தரப்பிடம் விசாரணை ஆணையம் சமர்ப்பித்துள்ளது. படித்துவிட்டு 15 நாட்களுக்குள் பிரமான பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு சசிகலாவுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. 

அதில் ஜெயலலிதாவின் நண்பர்கள், உறவினர்கள், என அனைத்து தரப்பினரிடமும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.  

இதனிடையே ஜெயலலிதா மரணம் குறித்து விளக்கம் கேட்டு சசிகலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 

ஆனால் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு பங்கு இருப்பதாக புகார் கொடுத்தது யார் என்று கூறினால் மட்டுமே தன்னால் சம்மனுக்கு பதில் தர முடியும் என நீதிபதி ஆறுமுகசாமியிடம் சசிகலா தரப்பு தெரிவித்தது. 

இதையடுத்து அதற்கு விசாரணை ஆணைமும் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 2,956 பக்க ஆவணங்களை சசிகலா தரப்பிடம் விசாரணை ஆணையம் சமர்ப்பித்துள்ளது. படித்துவிட்டு 15 நாட்களுக்குள் பிரமான பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு சசிகலாவுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 


 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!