"சட்டப் பேரவையில் ஜெ. படம் திறக்கும் நாளுக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்" - ஓபிஎஸ் பேச்சு

Asianet News Tamil  
Published : May 27, 2017, 12:21 PM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
"சட்டப் பேரவையில் ஜெ.  படம் திறக்கும் நாளுக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்" - ஓபிஎஸ் பேச்சு

சுருக்கம்

ops pressmeet about jayalalitha photo in assembly

சட்டப் பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கப்படுவதால் தமிழ்நாட்டுக்கே பெருமை என்றும் அந்த நாளை மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா படம் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஆனால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல அரசியல் கட்சித் தலைவர்கள்   அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ், ஒரு கிரிமினலின் படத்தை சட்டப் பேரவையில் திறக்கக் கூடாது என தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியில் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், சட்டப் பேரவையில் ஜெயலலிதா படத்தைத் திறந்தால், வீரப்பன் படத்தையும் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஜெயலலிதாவின் ஆட்சி 100 ஆண்டுகள் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சட்டப் பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பதால் அது தமிழ்நாட்டுக்கே பெருமை என்று தெரிவித்துள்ள ஓபிஎஸ், ஜெயலலிதா படம் திறக்கும் நாளை மக்கள் ஆவலுடம் எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறார்கள் என கூறியுள்ளார்.

ஆனால் பொறாமையால் பொங்கி சிலர் கூறும் வார்த்தைகள் மக்கள் மனதில் எடுபடாது என தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மதுரையின் விஸ்வரூபம்..!சர்வதேச அந்தஸ்து வழங்கிய மத்திய அரசு - இபிஎஸ் வரவேற்பு..!
அமைச்சர் பதவி கிடைக்காது..! பி.டி.ஆரைத் தோற்கடிக்க ஸ்கெட்ச் போடும் தளபதி... திமுகவின் உள்ளடி அரசியல்..!