
ஓ.பி.எஸ். ஜி.கே.வாசனை சந்தித்த பிறகு, இருவரும் கூட்டாக செயதியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஜி.கே.வாசன் கூறியதாவது:
புரட்சித்தலைவி ஜெயலலிதா, தனது பணியை செய்ய முடியாத சூழ்நிலை வந்தபோது, அவரால் அடையாளம் காட்டப்பட்டவர்தான், ஓ.பி.எஸ்.
பொதுமக்களால் கூறப்படும் ஒரே வார்த்தை ஓ.பி.எஸ். நல்ல மனிதர். ஆர்ப்பாட்ட அரசியலுக்கு அப்பார்ப்பட்டவர். பண்பாளர் என கூறுகின்றனர். எனவே, மக்கள் மனதிலும் ஓ.பி.எஸ். தான் இருக்கிறார்.
ஆர்.கே. நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மதுசூதனன், மிக நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர். எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி ஆவார்.
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஓ.பி.எஸ். நிறுத்தியுள்ள வேட்பாளர் மதுசூதனனுக்கு முழு ஆதரவு கொடுப்பது என முடிவு எடுத்துள்ளோம்.
எனவே வடசென்னை தமாகா மாவட்ட செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகள், ஒரு குழுவாக செயல்பட்டு ஆர்கே நகரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார்கள். நாளை மாலை ஓ.பி.எஸ்.ஸுடன் சேர்ந்து ஆ.கே. நகரில் தாம், வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பதாக வாசன் கூறினார்.
ஓ.பி.எஸ்.ஸுடன் கைக்கோர்த்த இந்த நிகழ்வு. மக்கள் விரும்பி எதிர் பார்த்த நிகழ்வு என வாசன் தெரிவித்தார். மேலும், உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என வாசன் நம்பிக்கை தெரிவித்தார்.