என்னை நீக்க யாருக்கும் உரிமை கிடையாது!! நான் மிருகமில்லை மனிதன் – ஓ.பி.எஸ் காட்டம்

 
Published : Feb 08, 2017, 02:15 AM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
என்னை நீக்க யாருக்கும் உரிமை கிடையாது!! நான் மிருகமில்லை மனிதன் – ஓ.பி.எஸ் காட்டம்

சுருக்கம்

ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திய பிறகு வீட்டுக்கு சென்ற ஓ.பி.எஸ்க்கு மைத்ரேயன், பரிதி இளம்வழுதி, மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் அசோக், ராஜலக்ஷ்மி ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

பின்னர் மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம் தன்னை அதிமுகவில் இருந்தும் பொருளாளர் பொறுப்பில் இருந்தும் நீக்க யாருக்கும் உரிமை கிடையாது என தெரிவித்தார்.

ஏனெனில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதாதான் இந்த பதவியை எனக்கு அளித்தார். அதை சிறப்பாக செய்திருக்கிறேன் என நம்புவதாக தெரிவித்தார். அதனால் என்னை யாரும் நீக்க உரிமை இல்லை என தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுடன் உங்களுக்கு மறைமுக தொடர்பு உள்ளதாக சசிகலா சுட்டிகாட்டியது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு

மனிதனுக்கும் மிருகத்திற்கும்  இடையே உள்ள வித்தியாசமே சிரிப்பு தான். மிருகங்கள் சிரிக்காது. நான் மனிதன். அதனால் சிரித்தேன். எதிர்க்கட்சி தலைவரை பார்த்து சிரித்தது குற்றமாகாது என உறுதியாக தெரிவித்தார்.

எனக்கு மடியில் கனமில்லை அதனால் பயமில்லை என தெரிவித்த பன்னீர்செல்வம் மற்ற விஷயங்கள் தெரிந்துகொள்ள நாளை வரை பொறுத்திருந்து பாருங்கள் என பூடகமாக சொல்லிவிட்டு சென்றார்.

 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!