சசிகலா குடும்பத்தை ஆக்டோபஸ் கரங்களால் வளைத்துப் பிடித்த வருமான வரித்துறை !!  தொடரும் ஆப்ரேஷன் கிளீன் பிளாக் மணி !!!

First Published Nov 10, 2017, 10:24 AM IST
Highlights
operation clean black money continue


தமிழகத்தில் இதுவரை இந்தியாவே காணாத வகையில் ஒரு மெகா  ரெய்டை வருமான வரித்துறை நடத்தி வருகிறது. சசிகலா குடும்பம் மற்றும் அவரது உறவினர்களை குறிவைத்து நடத்தப்பட்டு வரும் இந்த சோதனையில் தோண்ட தோண்ட கிடைத்து வரும் ரகசியங்கள் வருமான வரித்துறையினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசி கலாவின்  மன்னார்குடி உறவுகள், நண்பர்கள் என ஒட்டுமொத்த நெட் ஒர்க்கையும் குறி வைத்து  1800  வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முதல் பிரமாண்ட அதிரடி ரெய்டை நடத்தி வருகின்றனர்.

சசிகலா குடும்பத்தின் உறவினர்கள், பினாமிகள் என 355 பேர் இந்த ரெய்டில் சிக்கியுள்ளனர். இவர்களது 215 சொத்துக்களையும் ஒட்டுமொத்தமாக வளைத்துப் போட்டு வருமான வரித்துறை துறை அதிரடியாக விசாரண நடத்தி வருகின்றனர். 

ஜெயலலிதா , உயிரோடு இருந்த வரை சசிகலா குடும்பத்தை மத்திய அரசோ, வருமான வரித்துறையினரோ நெருங்க கூட முடியாமல்  இருந்தனர். ஆனால்  இப்போது சசிகலா குடும்பத்தின் ஒட்டுமொத்த நெட் ஒர்க்கையும் குறி வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய 'ஆபரேஷன் கிளீன் பிளாக் மணி' என்ற அட்டாக்கை நிகழ்த்தியுள்ளனர்.

நேற்று காலை ஜெயா தொலைக்காட்சியில் தொடங்கிய இந்த தஞ்சை, மன்னார்குடி, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி என சசிகலாவின் ஒட்டுமொத்த  சாம்ராஜ்யத்தையும் புரட்டிப் போட்டது.

கடந்த பல ஆண்டுகளாக  ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை சம்பாதித்த சசிகலாவின் உறவுகள், நட்புகள், பினாமிகள் தற்போது  போயுள்ளனர். வருமான வரித்துறையினரின் இந்த கிடுக்கிப்பிடியில் அவர்கள் சிக்கித் திணறி வருகின்றனர்.

சசிகலா குடும்பத்தின் 190 இடங்களில் 40 இடங்களில் ஐடி ரெய்டு முடிந்தது. தமிழகம் முழுவதும் 2-வது நாளாக இன்றும் 150 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

சென்னை விவேக் வீடு 

சென்னை அருகே படப்பை மிடாஸ் மதுபான ஆலை 

சென்னையில் விவேக்கின் ஜாஸ் சினிமாஸ் 

சென்னையில் இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா வீடு 

சென்னை போயஸ் கார்டனில் பழைய ஜெயா டிவி அலுவலகம் 

புதுச்சேரியில் தினகரனின் ரகசிய பண்ணை வீடு 

மன்னார்குடியில் திவாகரன் மற்றும் 13 பேரின் வீடுகள் 

மன்னார்குடி திவாகரன் கல்லூரி

மன்னார்குடியில் தினகரன் தாயார் வனிதா மணி வீடு 

ஜெயலலிதாவின்  கோடநாடு எஸ்டேட் 

புதுச்சேரி லஷ்மி ஜுவல்லர்ஸ் 

திருச்சி டாக்டர் சிவக்குமார் வீடு 

திருச்சி கலிய பெருமாள் வீடு 

நாமக்கல் சசிகலாவின் வக்கீல் செந்தில் 

நாமக்கல் வக்கீல் செந்திலின் நண்பர் சுப்பிரமணியம் 

ஈரோடு கொத்தமங்கலம் காகித ஆலை 

கடலூரில் சசிகலா ஜோதிடர் சந்திரசேகரன் வீடு என தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இன்று காலை முதல் அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினர் தங்களது அதிரடியை தொடங்கியுள்ளனர்.

 

 

 

 


 

click me!