
ஜாதகம் சரியில்லாத சிலர், இந்த ஆட்சி நீடிக்காது என்று ஜோசியம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அவர்களது கனவு கானல் நீராகிவிடும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்..
திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என்பது ஜெயலலிதாவின் ஆசை.
தாய் சொல்லைத் தட்டாத பிள்ளைகள் நாம். தாய் எதைச் சேர்க்கச் சொன்னாரோ, அதைச் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். எதை நீக்கச் சொன்னாரோ, அதை நீக்கிக் கொண்டிருக்கிறோம். எதைக் கொண்டாடச் சொன்னாரோ, அதைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் புனிதப் பாதையிலே உருவான இந்த ஆட்சி. ஜெயலலிதாவிடம் தோற்றுப் போனவர்களும், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்களும், அசைத்துப் பார்த்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள் என்றார் ஓபிஎஸ்..
அரும்பாடுபட்டு ஜெயலலிதா உருவாக்கிய இந்த ஆட்சிக்கு, சிலர் கெடு விதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜாதகம் சரியில்லாத சிலர், இந்த ஆட்சி நீடிக்காது என்று ஜோசியம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என ஓபிஎஸ் கிண்டல் செய்தார்.