தொழிற்சாலையில் வேலை செய்தால்தான் தொழிலாளர்கள்..! முதலமைச்சரின் கண்டுபிடிப்பால் அதிர்ந்து போன அரசு ஊழியர்கள் !!

By Selvanayagam PFirst Published Nov 14, 2018, 7:10 PM IST
Highlights

தொழிற்சாலைகளில் வேலை செய்தால்தான் அவர்கள் தொழிலாளர்கள் என்றும், தொழிலாளர் தினமான மே 1 ஆம் தேதியன்று தொழிலளர்களுக்கு மட்டுமே விடுமுறை தர முடியும் என்றும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை இல்லை என்றும் திரிபுரா முதலமைச்சர் பிப்லப் தேப் குமார் அறிவித்துள்ளார்.

திரிபுரா முதலமைச்சர்  பிப்லப் தேப் குமார் என்றாலே, மண்டையைப் பிளந்து வெளியே கொட்டும் அளவிற்கு மூளை உள்ளவர் என்று பெயரெடுத்தவர். முததலமைச்சராக  பதவியேற்றது முதல், தற்போது வரை உளறிக்கொட்டாத ஒரு பேச்சையோ, பேட்டியையோ அவர் அளித்ததில்லை.

அந்த வகையிலேயே மே தினவிடுமுறை தொடர்பாகவும் பேசியுள்ளார்.2019-ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களின் பட்டியலை திரிபுரா மாநில பாஜக அரசு அண்மையில்வெளியிட்டது.

அதில் தொழிலாளர் தினமான மே 1-அன்று அளிக்கப்பட்டிருந்த விடுமுறை நீக்கப்பட்டு இருந்தது. கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை நாட்கள் பட்டியலில் அது வைக்கப்பட்டது.இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் மே 1 விடுமுறை ரத்து பற்றி திரிபுரா முதலமைச்சர்  பிப்லப் தேப் குமார் விளக்கம் அளித்துள்ளார்.அதில், “தொழிற்சாலையில் வேலைபார்ப்பவர்கள் மட்டுமே தொழிலாளர்கள்; அரசு ஊழியர்கள் தொழிலாளர்கள் அல்ல” என்றும், “எனவே, அவர்களுக்கு ‘மே 1’ அன்று விடுமுறை தேவையில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.“

நான் என்ன அரசு ஊழியனா? நான் மாநில முதலமைச்சர் . அரசு கோப்புகளை கையாளும் நீங்கள் பணியாளர்கள். நீங்கள் தொழிற்சாலையிலா வேலைபார்க்குறீர்கள்? உங்களுக்கு ஏன் விடுமுறை? விடுமுறை இல்லை என்றால் நீங்கள் ஏன் துக்கப்படுகிறீர்கள்?” என்றும்அரசு ஊழியர்களிடம் கேட்டுள்ளார்.

அத்துடன், ‘மே தினத்திற்கு விடுமுறை அளிப்பதை நான் எங்குமே கண்டதில்லை’ எனவும், விடுமுறைக்கான தேவை என்ன இருக்கிறது? என்பது தெரியாமலேயே இடதுசாரிகள் மே 1 விடுமுறையை அறிவித்திருக்கிறார்கள் என்றும் கூறி தனது மேதாவித்னத்தை  பிப்லப் குமார் வெளிப்படுத்தியுள்ளார்

click me!