தைரியமான முடிவு... முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய ராமதாஸ்..!

Published : May 23, 2021, 11:05 AM IST
தைரியமான முடிவு... முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய ராமதாஸ்..!

சுருக்கம்

ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இல்லாத கடுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என ராமதாஸ் கூறியுள்ளார்.

ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இல்லாத கடுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இல்லாத கடுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது நல்ல முடிவு.

தளர்வுகள் இல்லாத ஊரடங்கு என்பது சாலைகளில் காக்கை, குருவி நடமாட்டம்கூட இல்லாததாக இருக்க வேண்டும். இந்த வரையறைக்கு ஏற்ற வகையில் முழு ஊரடங்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். கடுமையான ஊரடங்குக்கு முன்பு அத்தியாவசியப் பொருட்களை வாங்க இன்று கடைகள் திறக்கப்படும்போது அவற்றில் கூட்டம் கூடுவதைத் தடுக்க வேண்டும்.

இன்றும் நாளையும் அனைத்துகடைகளையும் திறக்க அனுமதிப்பது தேவையற்றது. அதை மறுஆய்வு செய்ய வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளைத் தவிர மற்ற கடைகளை திறப்பது தேவையின்றி கூட்டம் கூடவும், கொரோனா தொற்று பரவுவதற்கும் மட்டுமே வழிவகுக்கும் என ராமதாஸ் கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: ஜூனில் வரவு, ஜூலையில் ஜாக்பாட்.! இன்னும் 30 நாட்களில் கிடைக்க போகும் ரூ.2,500 சர்ப்ரைஸ்.!
Vijay's Gold Scheme: கல்யாணத்துக்கு 8 கிராம் தங்கம், குழந்தை பிறந்தா மோதிரம்! எப்போ கிடைக்கும் தெரியுமா?