
மோடியின் அதிரடி அறிவிப்பால் தினந்தோறும் வியாபாரம் செய்யும் வியாபாரிகள், கருப்பு பணம் வைத்திருப்பவர்களை விட அதிக அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பவர்கள் யார் தெரியுமா?
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைதேர்தல் தொகுதி பிரதான கட்சி வேட்பாளர்கள் தான்
திமுக மற்றும் அதிமுகவின் கௌரவ பிரச்சனையான இந்த இடைதேர்தல் வெற்றி வாழ்வா? சாவா? என்ற நிலையில் பார்க்கபடுகிறது
இந்த நிலையில் தான் மோடியின் அதிரடி அறிவிப்பு இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் பணம் கிடைக்கும் என்று நம்பியிருந்த வாக்களர்கள் பலரும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
தொகுதிக்கு சுமார் பத்திலிருந்து இருபது கோடி வரை செலவு செய்ய பெரிய கட்சிகள் திட்டமிட்டு இருந்தன.
இந்த நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பால் பிரதான கட்சியின் பொறுப்பாளர்கள் திணறி போயிருந்தாலும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ள டிச. 30வரை கால அவகாசம் உள்ளதால் வாக்காளர்களுக்கு பழைய பணத்தையே கொடுத்து விடலாமென்றும் 4000 ரூ வரை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்ற நடைமுறை உள்ளதால் வாக்காளர்களே மாற்றி கொள்வார்கள் என்று முடிவெடுத்து பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை விநியோயகம் செய்ய பிரதான கட்சிகளின் பொறுப்பாளர்கள் இறுதி முடிவு எடுத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பழைய பணமோ புது பணமோ ஏதோ ஒரு பணம் தங்களுக்கு கிடைத்தால் போதும் என்கின்றனர் ஓட்டுக்கு பணம் கிடைக்கும் என நம்பியிருப்பவர்கள்.