
வயதானவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க வழி வகை செய்வதற்காக மத்திய அரசு அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்களுக்கு வயதான பிறகு ரூ.1000 முதல் ரூ.5000 வரையிலான ஓய்வூதியம் மாதம் மாதம் கிடைக்கும். இது தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளது. அவர்களுக்கு நிறுவனத்தின் மூலம் ஓய்வூதியம் இல்லை என்பதால் மத்திய அரசின் இந்த திட்டம் அவர்களுக்கு மாத மாதம் உதவித்தொகையாக கிடைக்கும்.
இந்த திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஒரு மாதத்திற்கு ரூ.5000 அல்லது ஆண்டுக்கு ரூ.60,000 ஆயுள் ஓய்வூதியம் உத்தரவாதம் அளிக்கிறது. தற்போதைய விதிகளின்படி, நீங்கள் 18 வயதில் இருந்தால், அதிகபட்சமாக ரூ.5000 ஓய்வூதியம் பெறுவதற்கான திட்டத்தில் சேருங்கள். எனவே நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.210 செலுத்த வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அதே பணத்தை கொடுத்தால், நீங்கள் ரூ.626 செலுத்தலாம். ஆறு மாதங்களில் நீங்கள் 18 வயது திட்டத்தில் முதலீடு செய்தால் ரூ .1,239 செலுத்த வேண்டும். ஒரு மாதத்திற்கு ரூ.1,000 ஓய்வூதியம் பெற, நீங்கள் மாதம் ரூ.42 செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்துவதற்கு 3 வகையான திட்டங்களை வகுத்துள்ளது. காலாண்டு முதலீடு அல்லது அரை ஆண்டு முதலீடு. நீங்கள் 42 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். 42 ஆண்டுகளில் உங்கள் மொத்த முதலீடு 1.04 லட்சமாக இருக்கும். அதற்கு ஈடாக, 60 ஆண்டுகளுக்குப் பிறகு, வாழ்க்கைக்கு மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறுவீர்கள். மத்திய அரசின் இந்த திட்டம் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது. மேலும் வருமான வரியின் 80 சிசிடி பிரிவின் கீழ், வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் சேரும் உறுப்பினரின் பெயரில் ஒரு கணக்கு மட்டுமே திறக்கப்படும். ஒருவேளை பல வங்கி கணக்கு வைத்திருந்தால் வங்கிக்கு ஒரு திட்டத்தில் சேரும் வசதியும் உண்டு. இதன் உறுப்பினர் திட்டகாலம் முடியும் காலத்தில் ஒரு வருடத்திற்கு முன்போ அல்லது அதற்கு பின்னரோ இறந்துவிட்டால், ஓய்வூதியத் தொகை உறுப்பினரின் மனைவி/கணவனுக்கு வழங்கப்படும். உறுப்பினரும் துணைவரும் இறந்துவிட்டால், ஓய்வூதியத்தை பரிந்துரைக்கப்பட்டவருக்கு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.