அட கடவுளே.. ஒவ்வொரு 4 நிமிடத்திற்கு 1 பெண்ணின் மார்பகத்தில் இந்த பாதிப்பு.. கதிகலங்கவைக்கும் அதிர்ச்சி .

By Ezhilarasan BabuFirst Published Nov 1, 2021, 1:56 PM IST
Highlights

2020 இல் உலகத்தில் 10 மில்லியன் பேர் புற்று நோயால் உயிரிழந்துள்ளனர். மார்பகப்புற்றுநோய் பொறுத்தவரை இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாதிக்கப்படுகிறார். 

இந்தியாவைப் பொறுத்தவரையில்  நான்கு நிமிடத்திற்கு ஒரு பெண் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், கடந்த  2020இல் மட்டும் உலக அளவில் 10 மில்லியன் பேர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர் என்றும், தமிழக  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். பெண்களை பல நோய்கள் தாக்கினாலும் குறிப்பாக மார்பக புற்றுநோயால் அவர்கள் தாக்கப்படுவதும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு புதிதாக மார்பகப்புற்றுநோய் கண்டறியப்பட்டது, அதில் 6.85 லட்சம் பேர் புற்று நோயால் உயிரிழந்தனர். 

இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், வாழ்வியல் முறை சுற்றுச்சூழல் போன்றவை பெண்களின் மார்பக புற்றுநோய் முக்கிய காரணமாக இருந்து வருகிறது, பெண்களைத் தவிர 0.5 முதல் ஒரு சதவீதம் வரை ஆண்களையும் மார்பகப் புற்றுநோய் தாக்குகிறது. தேசிய புற்றுநோய் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, 2020ம் ஆண்டு நிலவரப்படி 13.9 லட்சமாக இருந்த மார்பகப் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை 2025ம் ஆண்டு 15.7 லட்சமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை, டெல்லி, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இதையும் படியுங்கள்: Breaking:வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணை ரத்து.. நீதி மன்றம் அதிரடி. பாமக அதிர்ச்சி.

இந்நிலையில் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்கான மையம் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் சேகர்பாபு, மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதில் கலந்துகொண்ட சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி பேசியதாவது, அக்டோபரை பிரதிபலிக்கும் வகையில் சென்னை மாநகராட்சியின் மாளிகைக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புற்று நோயாளிகளில் 27.7 சதவீதம் பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு மேல் சென்னை மாநகராட்சியில் மார்பகப்  புற்று நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மார்பகப் புற்று நோய்களுக்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் பெண்கள் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.

இதையும் படியுங்கள்:  பயங்கர ஆச்சர்யம்.. இதுல மட்டும் 35 கோடியா.. பிளான் போட்டு தட்டி தூக்கிய முதல்வர் ஸ்டாலின்.

அவரைத் தொடர்ந்து பேசிய தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன், தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதலின்படி புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் துவங்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது என்றார். இது தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் கலந்து  கலந்து கொண்டு வருகிறேன், தமிழ் நாட்டின் மிகச்சிறந்த அடையாளங்களில்  ரிப்பன் மாளிகையும் ஒன்று தற்போது ரிப்பன் மாளிகை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில் பிங்க் நிறத்தில்  ஒளிர்கிறது, 2020 இல் உலகத்தில் 10 மில்லியன் பேர் புற்று நோயால் உயிரிழந்துள்ளனர். மார்பகப்புற்றுநோய் பொறுத்தவரை இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாதிக்கப்படுகிறார். இந்தியாவிலுள்ள மாநகராட்சிகளில் அதிநவீன கருவிகள் மூலம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனைகளை சிறப்பாக செய்யும் மாநகராட்சியாக சென்னை மாநகராட்சி இருந்து வருகிறது என்றார். 
 

click me!