மீண்டும் பதவியேற்ற ஓ.ராஜா... கெத்துக் காட்டும் ஓ.பி.எஸ் குடும்பம்!

By vinoth kumarFirst Published Dec 27, 2018, 1:57 PM IST
Highlights

மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவராக வெற்றிபெற்ற அன்றே கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.ராஜா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு இன்று கம்பீரமாக பதவியேற்றுள்ளார். இதன் மூலம் மீண்டும் ஓ.பிஎஸ் குடும்பம் கெத்துக் காட்ட ஆரம்பித்திருக்கிறது. 

மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவராக வெற்றிபெற்ற அன்றே கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.ராஜா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு இன்று கம்பீரமாக பதவியேற்றுள்ளார். இதன் மூலம் மீண்டும் ஓ.பிஎஸ் குடும்பம் கெத்துக் காட்ட ஆரம்பித்திருக்கிறது.   

மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவராக ஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா கடந்த 17ம் தேதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த விழாவில், அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஓ.ராஜாவுக்கு பொன்னாடைகளை போர்த்தி, கைகுலுக்கி வாழ்த்துக்கள் தெரிவித்து உற்சாகம் கரைபுரண்ட நிலையில், சிறிது நேரத்திலேயே அவர் அதிமுகவிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக அதிரடி அறிவிப்பு வெளியானது.

 

மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஓ.ராஜா, தேர்தலில் முறைகேடான வழிகளைப் பயன்படுத்தி வெற்றி பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டதால் அவரை கட்சியில் இருந்து நீக்கியதாகக் கூறப்பட்டது. ஓ.ராஜா தான் செய்த தவறை உணர்ந்ததால் அவர் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார் என கட்சி மேலிடம் விளக்கமளித்து ஐந்தே நாட்களில் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டது. 

ஓ.ராஜா அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் அதே வேகத்தில் கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டதும் பெரும் சர்ச்சை கிளப்பியது இந்நிலையில் ஓ.ராஜா மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இன்று மீண்டும் பதவியேற்றுள்ளார். இந்த விழா மூலம் மீண்டும் கெத்துக் காட்ட ஆரம்பித்திருக்கின்றனர் ஓ.பி.எஸ் குடும்பத்தினர்.  

click me!