சிறுபான்மை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் திமுக... மு.க.ஸ்டாலின் மீது பாயும் எடப்பாடி..!

By vinoth kumarFirst Published Mar 13, 2020, 2:48 PM IST
Highlights

என்பிஆர் தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய கடிதத்திற்கு மத்திய அரசு இன்னும் பதில் அளிக்காததால் தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு  நிறுத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று கூறியிருந்தார். இந்த விவகாரம் இன்று மீண்டும் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) பணிகள் நிறுத்திவைக்கப்பட்டதை சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

என்பிஆர் விவகாரத்தில் சிறுபான்மை மக்களிடையே எதிர்க்கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

என்பிஆர் தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய கடிதத்திற்கு மத்திய அரசு இன்னும் பதில் அளிக்காததால் தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு  நிறுத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று கூறியிருந்தார். இந்த விவகாரம் இன்று மீண்டும் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) பணிகள் நிறுத்திவைக்கப்பட்டதை சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்;- என்பிஆர் நிறுத்திவைப்பு என்பது புதிய அறிவிப்பு இல்லை. சட்டப்பேரவையில் கூறியதையே செய்தியாளர் சந்திப்பிலும் தெரிவித்தேன். இதில் உரிமை மீறல் எதுவும் இல்லை என்றார். 

பின்னர், பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்பிஆர் விஷயத்தில் சிறுபான்மை மக்களிடையே எதிர்க்கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என கேட்டுக்கொண்டார். என்பிஆர் விவகாரத்தில் பொதுமக்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். சிறுபான்மை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தாமல் உண்மைகளை மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள். எந்த இடத்தில் பாதிப்பு என்பதை சொல்லாமல் அமைதி மாநிலமாக இருக்கும் தமிழகத்தில், டெல்லி போன்று பதற்றத்தை உருவாக்க வேண்டாம். சட்டப்பேரவைக்கு உள்ளே ஒன்று பேசி, வெளியே சென்று வேறு மாதிரியாக பேசி, எதிர்க்கட்சிகள் பெரிதாக்கக் கூடாது என முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். 

click me!