நடிகர்கள் மட்டுமல்ல அனைவருமே மாற்றம் வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.. பிக்பாஸ் பிரபலம் பளார்.

By Ezhilarasan BabuFirst Published Apr 8, 2021, 1:40 PM IST
Highlights

நடிகர் விஜய் சைக்களில் வாக்களிக்க வந்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், உடல் ஆரோக்கியத்திற்கும் சைக்களை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும், அனைவரும் பொது வாகனத்தை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும் அவர் சைக்கிளில் வந்தார் என நாம் எடுத்து கொள்ளலாம்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலை பள்ளியில் சிலம்பம் நூல் வெளியீட்டு விழா மற்றும் சிலம்பம் விளையாட்டு பட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் ,நடிகை சாய் தன்ஷிகா ,நடிகர் தாமு, திரைப்பட ஸ்டண்ட் இயக்குனர் பவர் பாண்டியன், நடிகர் ஆரி அர்ஜுன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் நூலினை நடிகர் ஆரி அர்ஜுன் வெளியிட கலைமாமணி வி.கே.டி பாலன் பெற்று கொண்டார். நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஆரி அர்ஜுன், நம்மளை ஆண்ட ஆங்கிலேயரிடம் நமக்கு சொந்தமான பல கலைகள் உள்ளது. அது அனைத்தும் மாண்டு போய்விட்டது ஆனால் அதில் இருந்து மீண்டு வந்த கலைதான் சிலம்பம். சிலம்பம் என்பது வெறும் கம்பு இல்லை அது தமிழர்களின் வீரம். ஒவ்வொரு தமிழர்களும் பறைசாற்ற கூடிய ஒன்றாகும். தமிழர்களின் கலையான சிலம்பத்தை அனைவரும் கற்று கொள்ள வேண்டும். தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் மாற்றத்திற்கான ஆட்சியாக, நல்லாட்சியாக கொடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

நடிகர் விஜய் சைக்களில் வாக்களிக்க வந்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், உடல் ஆரோக்கியத்திற்கும் சைக்களை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும், அனைவரும் பொது வாகனத்தை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும் அவர் சைக்கிளில் வந்தார் என நாம் எடுத்து கொள்ளலாம். நடிகர் அஜித் செல்போனை பிடுங்கியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு பிரபலங்களும் வெளியில் வரும் போது பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதே போல தான் அஜித்தும். ஆனால் அஜித் அந்த நபரிடம் செல்போனை திருப்பி கொடுத்துவிட்டு அவருக்கு எடுத்து கூறிய விதம் பாராட்ட கூடிய ஒன்றாகும். 

நடிகர்கள் மட்டும் மாற்றம் வர வேண்டும் என்று நினைக்கவில்லை அனைவரும் மாற்றம் வர வேண்டும் என நினைக்கிறார்கள். மற்ற மாவட்டங்களை விட  சென்னையில் வாக்கு சதவீதம் குறைவு என்பது வருத்துக்குரிய ஒன்றாகும் என்றார். பின்னர் பேசிய என்.ஆர்.தனபாலன்,வாக்கு சாவடி வைக்கப்பட்டுள்ள மையங்களில் மூன்றாடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட வேட்பாளரின் ஆட்கள் வாக்கு மையங்களில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. இதனால் எந்த வாக்கு சாவடி மையங்களிலும் பிரச்சனை வர வாய்ப்பு இல்லை. வெற்றி வாய்ப்பு என்பது மிக அதிகமாக உள்ளது. தமிழகம் அமைதி பூங்காவாக இன்று திகழ்வதால், இங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வரும் பட்சத்தில் மாற்றம் ஏற்படலாம் என்றார்.
 

click me!