தேர்தலில் நிற்பதற்கு மட்டுமல்ல இதுக்கும் தடைதான் !! அத்வானி, முரளி மனோகர் ஜோஷியை நோகடித்த மோடி !!

Published : Mar 26, 2019, 12:05 PM IST
தேர்தலில் நிற்பதற்கு மட்டுமல்ல இதுக்கும் தடைதான் !! அத்வானி, முரளி மனோகர்  ஜோஷியை நோகடித்த மோடி !!

சுருக்கம்

பாஜகவின் மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு தேர்தலில் நிற்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் இருவரும தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர் அத்வானி. பாஜக வளர்ச்சிக்கு மிகவும் துணை புரிந்தவர். வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது துணை பிரதமராக பதவி வகித்தவர் தான் அத்வானி. கிட்டத்தட்ட வாஜ்பாயிக்கு சரியான டஃப் கொடுத்தவர் தான் இவர்.

வாஜ்பாயிக்குப் பின் பாஜக தோற்றபோது, பாஜகவை தொடர்ந்து வழி நடத்தியவர் அத்வானி. பாஜகவின் அடுத்த பிரதமர் வேட்பாளர் அத்வானிதான் எனும் அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார்.

ஆனால் கடந்த தேர்தலில் அத்வானியை ஓரங்கட்டிவிட்டு மோடி அதிரடியாக பிரதமர் பதவியைப் பிடித்தார். அத்வானியால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது. பாஜக தொண்டர்களே அத்வானியின் நிலையைக் கண்டு வருத்தமடைந்தனர்.

கடந்த 2106 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானி குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியயோருக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதற்கிடையே நேற்று இரவு பாஜக சார்பில் நாடு முழுவதும்  சென்று பேசும் நட்சத்திர பிரச்சாரகர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மோடி, நிதின் கட்கரி, அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், உமா பாரதி, ஆதித்யநாத், அமித் ஷா உள்ளிட்ட 40 தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவரின் பெயர்கள் விடுபட்டுள்ளன.

இதனால் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மட்டுமல்லாமல் பல பாஜக ஆதரவாளர்களும் கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!