8 மாதங்கள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது... ஆர்.பி.உதயகுமார் சரவெடி..!

Published : Sep 10, 2020, 12:29 PM IST
8 மாதங்கள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது... ஆர்.பி.உதயகுமார் சரவெடி..!

சுருக்கம்

இன்றைக்கு எதிர்க்கட்சிகள் அதை செய்யவில்லை. திமுக ஆதிகாலத்தில் உள்ளது போல் செயல்பட்டு வருகிறது. திமுக வளர்ச்சியடையவில்லை பின்தங்கி மங்கிப் போய் உள்ளது. தேர்தல் 8 மாதத்துக்குள் வரும். தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி உறுதி. திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசியபோது, கடந்த 5 மாதங்களாக நாம் எந்த வேலையும் செய்யவில்லை அதை எல்லாம் சேர்த்து தற்போது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். 

8 மாதங்கள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது என மு.க.ஸ்டாலின் கருத்துக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலளித்துள்ளர். 

இன்னும் 8 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வரும் என்று நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்;- 8 மாதங்கள் இல்லை எத்தனை ஆண்டுகளானாலும் திமுக ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது. காலத்துக்கு ஏற்ப மக்கள் தேவை அறிந்து மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிந்து கொள்கைகளை வகுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டும்.

 ஆனால் இன்றைக்கு எதிர்க்கட்சிகள் அதை செய்யவில்லை. திமுக ஆதிகாலத்தில் உள்ளது போல் செயல்பட்டு வருகிறது. திமுக வளர்ச்சியடையவில்லை பின்தங்கி மங்கிப் போய் உள்ளது. தேர்தல் 8 மாதத்துக்குள் வரும். தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி உறுதி. திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசியபோது, கடந்த 5 மாதங்களாக நாம் எந்த வேலையும் செய்யவில்லை அதை எல்லாம் சேர்த்து தற்போது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் அவர் மக்களுக்கு கடந்த 5 மாதங்களாக எந்த வேலையும் செய்யவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். 

மேலும், அரியர் மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்பு குறித்து யூசிஜி மற்றம் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!
மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!