180 ரூவா டிக்கெட் எடுத்து படம் பாக்க வான்னு நாங்க சொன்னோமா..?: ரசிகர்களுக்கு  ‘விஜய்’ அப்பா பொளேர்! 

First Published Oct 27, 2017, 1:56 PM IST
Highlights
nobody compelled vijay fans to buy 180 rupee ticket says s a chandrasekar


180 ரூபாய் டிக்கெட் எடுத்து அவங்கள யாரு வந்து படம் பார்க்க கட்டாயப் படுத்தினது.. என்று கேட்டு, விஜய் ரசிகர்களைச் சீண்டியுள்ளார் ‘விஜய்’யின் தந்தை எஸ்.எஸ்.சந்திரசேகர். 

தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் எஸ்.ஏ. சந்திரசேகர் கலந்து கொண்ட பிரத்யேக கலந்துரையாடல் நிகழ்ச்சியில்தான் அவர் இவ்வாறு கருத்துக் கூறியுள்ளார். 

அண்மையில் வெளி வந்த விஜய்யின் ‘மெர்சல்’ படம் பெரும் சர்ச்சைகளைச் சந்தித்தது. அதில் கூறப்படும் ஜிஎஸ்டி குறித்த வசனங்கள் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது. உண்மைக்குப் புறம்பான தகவல்களை விஜய் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதாகக் கூறி, எதிர்ப்பும் கிளம்பியது. இந்நிலையில், விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல் ரீதியான கருத்துகளைக் கூறி, விஜய்க்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினார். 

இது குறித்து கேள்வி எழுப்பிய பேட்டியாளர், பலரும் பார்க்கும் ஒரு சினிமாவில் இப்படி தவறான தகவல்களைக் கொண்டு சேர்க்கலாமா என்று கேட்டதற்கு, சினிமா என்பதில் இதெல்லாம் கற்பனையாக சொல்லப்படுவது.. அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது.. என்று கூறினார் எஸ்.ஏ.சந்திரசேகர். 

விஜய்யின் பெயரை ஜோசப் விஜய் என்று கூறுகிறார்களே என்று கேட்டபோது,  அறிவிலிகள் விவரம் தெரியாதவர்கள் அப்படிச் சொல்கிறார்கள்.. அதை நாங்க சீரியஸா எடுத்துக்கறதில்லை. புறந்தள்ளிவிடுகிறோம் என்று கூறியவர், பேரு வெச்சி 43 வருசம் கழிச்சி இப்போ கேட்கிறாங்க... அவர்  கிறிஸ்துவராக இருப்பதால்தான் கோவில் வேண்டாம் என்று சொன்னதாக திரித்து விட்டு விமர்சிக்கிறார்கள். அதைத்தான் நான் எதிர்க்கிறேன் என்று கூறினார். 

அப்போது, சர்ச்சுக்கு என்ன பேரு... தேவாலயம் .. அதை கோவில்னும் சொல்லலாம்ல... அதனால, கோவிலை விட மருத்துவமனைய கட்டுங்கன்னு சொன்னதை... கோவில் வேண்டாம்னு சொன்னதை மத ரீதியா ஏன் பார்க்கணும் என்று கேள்வி எழுப்பினார் அவர்.  

ஜிஎஸ்டி குறித்து பேசுபவர், ஏன் சினிமா தியேட்டர்களில் உள்ள அநியாய கட்டண வசூலை விஜய் தட்டிக் கேட்கவில்லை என்று கேள்வி எழுப்பப் பட்டது.  டிக்கெட் கட்டணம் முன்பு ரூ. 110 இருந்தது வரிகள் உள்பட. ஆனால் இப்போது,  40 ரூபாய் கூடி 150 என்று ஆகி, அதனிலும் வரிகள் கூடுதலாக என்று கூறி,  30 ரூபாய் அதிகரித்துள்ளது.  ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ரூ. 70 இப்படி கூடுதல் ஆகிறது. இப்படி ஒவ்வொரு சாமானியனுக்கும் ரூ.80 டிக்கெட்டுக்காகவே அதிகம் ஆகிறது. இதை சமூக அக்கறை உள்ள விஜய் ஏன் தட்டிக் கேட்கக் கூடாது..
என் ரசிகன் மீது ஏன் இப்படி ஒரு விலை உயர்வை திணிக்கிறீர்கள் என்று கேட்கக் கூடாதா? என்று கேள்வி எழுப்பப் பட்டது.  

அதற்கு எஸ்.ஏ. சந்திரசேகர், இப்படி டிக்கெட் கொடுத்து படம் பார்க்க வாங்க என்று நாங்க யாரையும் கட்டாயப் படுத்தலியே என்று விலை உயர்வுக்கு நியாயம் கற்பிக்கிறார். 

இந்தப் பதிலைக் கேட்டு ரசிகர்கள் பலரும் மெர்சலாகிவிட்டனர். அதுமட்டுமல்ல, சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதமே நடக்கிறது இந்த பதிலைக் கேட்டு. 

ஜி.எஸ்.டி குறித்த தவறான கருத்து விதைப்புக்கு பதில் அளித்த சந்திரசேகர்,  இதுவரை ஒரு லட்சம் குடுத்துக்கிட்டுருந்தோம், இப்ப 18.000 வரியும் சேர்த்து குடுக்க வேன்டியிருக்கு - என்று புலம்புகிறார்.

அப்படி என்றால், "இவ்வளவு நாள் கூலாக வரி ஏய்ப்பு செய்து கொண்டிருந்தோம், ஜி எஸ்டி வந்து எல்லாத்தையும் கெடுத்துருச்சே" என்பது தான் இதில் உள்ள "மறை"பொருள் என்பது கூட பார்ப்பவர்களுக்குப் புரியாது என்று இவர் உண்மையிலேயே நம்புகிறாரா என்ன?  என்று கேள்வி எழுப்புகிறார்கள் நெட்டிசன்கள். 

ஜோசப் என்பது கிறிஸ்தவ மதப் பெயர் தானே என்றால், "ஏசு ஒரு சித்தர், அவங்க அப்பா ஜோசப் ஒரு சித்தர்.. எனவே அது ஒரு சித்தருடைய பெயர்" என்பதாக உரத்த குரலில் முழங்குகிறார் சந்திரசேகர். சரிதான். உண்மையில் விஜய்யே ஒரு சித்தர் தான், பிறகு அவர் தந்தையார் எஸ்.ஏ.சந்திரசேகர் மட்டும் எப்படி ஒரு சித்தராக இல்லாமல் இருக்க முடியும்? சித்தரின் கால் சித்தரே அறிவார் !  என்று கலாய்க்கின்றனர் சமூக வலைத்தளத்தில். 
 

click me!