ச்சே! கூட்டுறவு வங்கியில கொள்ளையே நடக்குறதில்லை: செம்ம வருத்தத்தில் செல்லூர் ராஜு.

By Selvanayagam PFirst Published Feb 3, 2019, 8:39 AM IST
Highlights


அமெரிக்க அதிபர் கிளின்டனை சந்தித்தபோது ‘மிஸ்டர் கிளின்டன்’ என்றுதான் அழைத்தேன். ஆனால் மோடியை பத்து முறை சார் என்று அழைத்தேன். மாநில நலனுக்காக அவரை திருப்திப்படுத்தவே இந்த சொல்: சந்திரபாபு நாயுடு. 
(அது சரி அமெரிக்காவுல எல்லாம் மாமனார் கட்சியை லபக்குறது, சித்தப்பன் கட்சியை சுருட்டுறது, மச்சானோட கட்சியை மடக்குறதுங்கிற சோலியெல்லாம் கெடையாது. பட் இங்கே எப்படி நாயுடுகாரு?)

*    எடப்பாடியார் ஆட்சியில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு எண்பது லட்சம் பேர், என்றைக்கு வேலை கிடைக்குமென காத்திருக்கின்றனர். இளைஞர்களை மேலும் மேலும் அ.தி.மு.க. அரசு ஏமாற்றி வருகிறது: ஸ்டாலின். 
(ஆமா தல நம்ம ஆட்சியில, பள்ளி கல்லூரி வாசல்லேயே நின்னு தவம் கிடந்து, படிப்பு முடிச்சவங்களை தூக்கிட்டு போயி கவர்மெண்டு வேலையில உட்கார வெச்சோம் இல்லையா, எடப்பாடி மட்டும்தான் காக்க வெச்சுட்டாரு)

*    கட்சிக்கு இது நாள் வரையில் காட்டிய அர்ப்பணிப்புக்காக பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு செல்லும் திருநாவுக்கரசரை பாராட்டுகிறோம்: காங்கிரஸ் தலைமை.
(அதான் ரிவிட்டு வெச்சுட்டீங்களே, அப்புறம் என்ன வாயில ஸ்வீட்டு? போங்க பாஸ் நாங்கள்ளாம் கட்டங்கட்டப்படாத கட்சியே கிடையாது தெரியுமா?)

*    கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழக கூட்டுறவு வங்கியில் எந்த ஒரு கொள்ளை ச்ம்பவௌம் நடக்கவில்லை. கொள்ளை முயற்சிகள் மட்டுமே நடந்துள்ளன. தனியார் வங்கிகளில் மட்டுமே கொள்ளி நடக்கிறது: செல்லூர் ராஜூ.
(தல, பணம் எங்கே இருக்குதோ அங்கேதானே போயி அடிப்பானுங்க? கூட்டுறவு வங்கியில அவனவனுக்கு கடனை தவிர என்ன  இருக்குது, வெறும் பட்டா, சிட்டா ரசீதையா கொள்ளை அடிக்க முடியும்?)

*    டாஸ்மாக் கடையில் விற்கப்படும் மது பாட்டில்களில் அடிக்கப்படும் கமிஷனில், எம்.எல்.ஏ.விலிருந்து அமைச்சர் வரை கமிஷன் போகிறது: ஆ.ராஜா. 


(விடுங்கண்ணே அவிய்ங்களுக்கு முடிஞ்சது அவ்வளவுதான். ஆனா நம்ம கட்சியில பல முக்கிய தலக்கட்டுங்க சரக்கு தயாரிக்கிற ஃபேக்டரியே வெச்சிருக்காங்க. நாம சப்ளை பண்றோம், அவிய்ங்க விக்குறாய்ங்க, இவ்வளவுதாம்ணே வித்தியாசம். இதுல யாருக்கு கெத்து அதிகமுன்னு உலகத்துக்கு தெரியும்.

click me!