2021ல் தமிழகத்தில் பாஜகவை யாராலும் தடுக்க முடியாது... குஷ்பு அபார நம்பிக்கை..!

Published : Dec 05, 2020, 04:19 PM IST
2021ல் தமிழகத்தில் பாஜகவை யாராலும் தடுக்க முடியாது... குஷ்பு அபார நம்பிக்கை..!

சுருக்கம்

 2021-ல் தமிழகத்திலும் பாருங்கள், யாராலும் நம்மை தடுக்க முடியாது” என்று அவர் பதிவிட்டுள்ளார். 

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பாஜகவின் எழுச்சி, பிரதமர் மோடியின் மீது நாட்டு மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது என்று பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது 4 பகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜக தற்போது 48 பகுதிகளை கைப்பற்றியுள்ளது. வாக்கு சதவிகிதத்திலும் டி.ஆர்.எஸ் கட்சியை விட  1 சதவிகிதமே குறைவாக பெற்றிருந்தது. இது ஐதராபாத்தில் பாஜகவின் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.  

இதுகுறித்து குஷ்பு வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை காட்டுகிறது. ஐதராபாத்தில் 2016-இல் வெறும் 4 இடங்களை பெற்ற பாஜக தற்போது 48 இடங்களை பெற்றுள்ளது, பாஜகவின் மிகப்பெரிய வளர்ச்சி. ஐதராபாத் தேர்தலில் பாஜகவின் இந்த எழுச்சி, பிரதமர் மோடியின் மீது நாட்டு மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. 2021-ல் தமிழகத்திலும் பாருங்கள், யாராலும் நம்மை தடுக்க முடியாது” என்று அவர் பதிவிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை... கடைசியில் மண்டியிட்ட வங்கதேசம்..!
ஹமாஸை ஒழிப்பதில் நாங்களே தலைமை தாங்குவோம்.. அமெரிக்காவிடம் அடம்பிடிக்கும் பாகிஸ்தான் இராணுவம்..!