மேக் இன் இந்தியா இல்லையாம் ! ரேப் இன் இந்தியாவாம் !! அதிரடி அட்டாக் கொடுத்த ராகுல் !!

By Selvanayagam PFirst Published Dec 13, 2019, 8:09 PM IST
Highlights

நரேந்திர மோடி 'மேக் இன் இந்தியா' என்று கூறியிருந்தார், ஆனால் இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் ரேப் இன் இந்தியாவாக உள்ளது என அதிரடியாக பேசி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

ஜார்கண்டில் நடந்த ஒரு தேர்தல் பொதுக்கூட்டத்தில்  பேசிய  ராகுல்காந்தி , பிரதமர்  நரேந்திர மோடி 'மேக் இன் இந்தியா' என்று கூறியிருந்தார், ஆனால் இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் ரேப் இன் இந்தியாவாக உள்ளது . 

உத்தரபிரதேசத்தில் நரேந்திர மோடியின் எம்எல்ஏ ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார், பின்னர் அவர் ஒரு விபத்தை சந்தித்தார், ஆனால் நரேந்திர மோடி அதுகுறித்து  ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 

தேசம் தனது மகள்களை "பாஜகவின் சில சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து" காப்பாற்ற வேண்டும். தற்போது நாடு "ரேப் இன் இந்தியா"வாக மாறி வருகிறது என பாஜக அரசை கடுமையாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில்   ரேப் இன் இந்தியா என்கிற வார்த்தையை பயன்படுத்தி பேசிய ராகுலுக்கு  பெண் எம்பிக்கள் இன்று மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து  அமளியில் ஈடுபட்டனர்.ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினர்.

இந்திய பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட வேண்டும் என்று ஒரு தலைவர் ஒரு தெளிவான அழைப்பை வழங்குவது வரலாற்றில் முதல் முறையாகும். ராகுல் காந்திக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்து, மன்னிப்பு கேட்கவும், சோனியா காந்தி ராகுலுக்கு அறிவுரை கூற வேண்டும் என அமைச்சர் ஸ்மிரிதி இரானி  தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, பிரதமர் மோடி  'மேக் இன் இந்தியா' என்றார், அதை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் நாட்டில் என்ன நடக்கிறது? அதைத்தான் ராகுல் காந்தி சொல்ல நினைத்தார். துரதிர்ஷ்டவசமாக மேக் இன் இந்தியா நடப்பதில்லை - நாட்டில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். இது கவலை அளிக்கிறது  என கூறினார்.

ராகுல் காந்தியின் 'ரேப் இன் இந்தியா' என்ற பேச்சால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைத்தார்.

மாநிலங்களவையையும் தேதி குறிப்பிடாமல் அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதையடுத்து 20 அமர்வுகளாக நடந்த குளிர்காலக் கூட்டத் தொடர் முடிவுக்கு வந்தது.

click me!