நோ சரக்கு... குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் டாஸ்மாக் நிர்வாக அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Apr 19, 2021, 4:04 PM IST
Highlights

முகக்கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முகக்கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைாயனது தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில் தமிழக அரசு தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி நாளை முதல் இரவு ஊரடங்கும், அதேபோல ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரமங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல கடையின் உள்ளே 5 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது, இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இடையே 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், எக்காரணத்தைக் கொண்டும் மொத்த விற்பனை செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கண்டிகப்பாக மது விற்பனை செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்பட வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு இடையே 6 அடி தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மதுபானங்களை மொத்த விற்பனை செய்யக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த 8ம் தேதி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போது, லிஸ்ட்டில் தப்பியது டாஸ்மாக்குகள் மட்டும் தான். இதனால் குடிமகன்கள் குஷியாக இருந்தனர். தற்போது டாஸ்மாக்குகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது குடிமகன்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

click me!