மகாராஷ்ட்ராவில் பாஜகவை வளர விட மாட்டோம் !! ஆதித்ய தாக்ரே அதிரடி அறிவிப்பு !!

By Selvanayagam PFirst Published Dec 20, 2019, 10:56 AM IST
Highlights

மகாஷ்டிராவில், பாஜகவை  வளர விடமாட்டோம் என்று , வொர்லி தொகுதி சட்டசபை உறுப்பினரும் முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவின் மகனும் ,  சிவசேனா கட்சியின்  இளைஞரணி தலைவருமான  ஆதித்ய தாக்கரே  அதிரடியாக தெரிவித்துள்ளார்.

மகாராஷ்ட்ராவில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவும், சிவசேனா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் இரு கட்சிகளும் வெற்றி பெற்றுன. ஆனால் முதலமைச்சர் பதவியை சிவசேனாவுக்கு விட்டுக் கொடுக்க பாஜக மறுத்ததையடுத்து அந்த கூட்டணி உடைந்தது.

இதையடுத்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைத்துள்ளது. உத்தவ் தாக்ரே முதலமைச்சாக பொறுப்போற்றுள்ளார்.

இதனிடையே மும்பையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய உத்தவ் தாக்ரேவின் மகனும், சிவசேனா கட்சியின்  இளைஞரணி தலைவருமான  ஆதித்ய தாக்கரே  , அதிகாரத்தில் அமர வேண்டும் என்ற பேராசைக்காக, பாஜக  30 ஆண்டு கால நண்பர்களையே உதறித் தள்ளிவிட்டது. 

அவர்கள் எவ்வளவுதான் மண்வளத்தை உருவாக்கினாலும், அவர்களின் சின்னமான தாமரையை, மகாராஷ்டிராவில், எந்த இடத்திலும், இனி வளர விடமாட்டோம் என்று உறுதிபடத் தெரிவித்தார்..

வரும் உள்ளாட்சித் தேர்தலில், பாஜக  வெற்றி பெறாது என, உறுதியாக கூறுகிறேன். ஜி.எஸ்.டி.,யும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டன. 

அதைப் பற்றி பேசக்கூட, பாஜக எங்களை அனுமதிக்கவில்லை. காலநிலை மாற்றம், பிளாஸ்டிக் தடை உள்ளிட்ட சவால்களை சமாளிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. கவர்னர் உரை, வாய்ஜாலமற்ற உறுதிமொழியை வழங்கியுள்ளது என்று ஆதித்ய தாக்ரே தெரிவித்துள்ளார்.

click me!