அதிமுக வேண்டாம்... மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணிக்கு தயாராகும் தேமுதிக..?

By Thiraviaraj RMFirst Published Mar 1, 2021, 1:21 PM IST
Highlights

அதிமுக மீது தேமுதிக அதிருப்தி - சட்டசபைத் தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உரிய முக்கியத்துவம் தரவில்லை என தேமுதிக அதிருப்தியடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

அதிமுக மீது தேமுதிக அதிருப்தி - சட்டசபைத் தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உரிய முக்கியத்துவம் தரவில்லை என தேமுதிக அதிருப்தியடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அமைச்சர் தங்கமணியுடனான பேச்சுவார்த்தையை தேமுதிக நிர்வாகிகள் தவிர்த்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் பாமகவுக்கு 23 தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கிறது. பாஜகவுக்கு 22 தொகுதிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. தேமுதிக தனக்கு 41 தொகுதிகளுக்கு மேல் வேண்டுமென மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறது.

கடந்த 2011ம் ஆண்டு அமைக்கப்பட்ட கூட்டணியின் போது தேமுதிகவுக்கு மவுசு அதிகமாக இருந்ததால், அப்போது 41 தொகுதிகள் வழங்கப்பட்டது. அந்த தேர்தலில் திமுகவை வீழ்த்தி எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்தார் விஜயகாந்த். அதற்கு பிறகு, தேமுதிகவின் பலம் குறைந்து விட்டது. விஜயகாந்த் உடல்நலம் குன்றியது இதற்கு முக்கிய காரணம். அந்த தேர்தலில் வழங்கப்பட்டதை போலவே அதிக தொகுதிகள் கொடுக்க தேமுதிக கோரிக்கை முன்வைத்தது.

தேமுதிகவை கண்டு கொள்ளாத அதிமுக, பாமகவை முதலில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இது தேமுதிகவினரை அப்செட் அடையச் செய்த நிலையில், 41 தொகுதிகள் கேட்ட பிரேமலதா விஜயகாந்த் தற்போது 25 தொகுதிக்கு இறங்கி வந்திருக்கிறார். அப்படி இல்லையெனில் ஒரு எம்.பி சீட்டும், 23 தொகுதிகளும் வழங்க வேண்டுமென தேமுதிக கூறுகிறதாம்.

இந்த நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது தேமுதிகவுக்கு 12 தொகுதிகள் மட்டுமே வழங்க அதிமுக விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகிறது. எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததால் தேமுதிக மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்கவிருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

click me!