ஓட்டம் பிடித்த சீனியர்கள்..! நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் ஆனதன் பின்னணி..!

By Selva KathirFirst Published Jun 1, 2019, 10:34 AM IST
Highlights

சீனியர்கள் யாரும் நிதியமைச்சர் பதவியை பெற முன்வராத நிலையில் வேறு வழியில்லாமல் நிர்மலா சீத்தாராமன் இடம் அப்பொழுது ஒப்படைக்கப்பட்டதாகவும் அதனை சவாலாக ஏற்று அவர் பெற்றுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சீனியர்கள் யாரும் நிதியமைச்சர் பதவியை பெற முன்வராத நிலையில் வேறு வழியில்லாமல் நிர்மலா சீத்தாராமன் இடம் அப்பொழுது ஒப்படைக்கப்பட்டதாகவும் அதனை சவாலாக ஏற்று அவர் பெற்றுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு மோடி அமைச்சரவையில் நிதி அமைச்சராக பணியாற்றியவர் அருண் ஜேட்லி. உடல்நலம் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சைகள் இருப்பதால் புதிய அமைச்சரவையில் இடம்பெற விரும்பவில்லை என்று அவர் கூறிவிட்டார். இதனால் புதிய நிதியமைச்சராக யாரை நியமிப்பது என்பதில் குழப்பம் நீடித்தது. ஏற்கனவே அருண் ஜேட்லி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த போது அவரது பணிகளை பியூஸ் கோயல் கவனித்து வந்தார்.

 

எனவே பியூஸ் கோயல் தான் மத்திய அமைச்சரவையில் நிதித்துறையை மீண்டும் பெறுவார் என்று பரவலாக பேச்சுகள் எழுந்தன. ஆனால் மத்திய நிதியமைச்சர் பதவியை ஏற்க பியூஸ் கோயல் தயங்கியதாக சொல்கிறார்கள். இதனால் தான் அவருக்கு ரயில்வே துறையை மீண்டும் கொடுத்ததுடன் கேபினட் வரிசையில் ஸ்மிருதி இரானிக்கு பிறகு அவரது பெயரை சேர்த்துள்ளார் மோடி. 

பியூஸ் கோயல் மறுத்துவிட்ட நிலையில் நிதியமைச்சராக யாரை நியமிக்கலாம் என்ற கேள்வியின் போது அமித் ஷா பெயர் அடிபட்டது. குஜராத்தில் உள்துறை அமைச்சர் ஆப் அதற்கு முன்னதாக அமித்ஷா அம் மாநில கூட்டுறவு வங்கியில் மிக முக்கிய பொறுப்பை வகித்து வந்துள்ளார். நஷ்டத்தில் இயங்கிய கூட்டுறவு வங்கிகளை பல கோடி ரூபாய் லாபத்திற்கு மாற்றிய பெருமை அமித்ஷாவிற்கு குஜராத்தில் உண்டு. இதைப்போல் குஜராத் மாநில நீதித்துறை சார்ந்த பல்வேறு பதவிகளையும் அமைத்திருந்தார். 

எனவே அமைச்சகம் உள்துறை அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் தனக்கு உள்துறை அமைச்சர் பதவிதான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து பதித்துக் கொண்டார் அமித்ஷா. இதற்கு அடுத்தபடியாக பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியில் இருந்த நிர்மலா சீதாராமன் பெயர்தான் நிதியமைச்சர் போட்டியில் இருந்தது. ஏற்கனவே தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இருந்துள்ளார். 

எனவே அந்த அனுபவத்தின் அடிப்படையில் நிர்மலா சீதாராமனுக்கு நிதியமைச்சர் பதவியை கொடுக்க மோடி முன்வர சற்றும் தயங்காமல் ஒப்புக்கொண்டுள்ளார் சீதாராமன். சீனியர்கள் பலரும் பிரதியமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறியதற்கு காரணம் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை என்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகள் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான ஆதாரங்களை உருவாக்கித் தர வேண்டியது நிதி அமைச்சகத்தின் பொறுப்பாகும். 

ஆனால் நாட்டின் அன்றாட செயல்களை தொய்வின்றி மேற்கொள்ளவே சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பற்றாக்குறை இருப்பதாக சொல்கிறார்கள். எனவேதான் ரிசர்வ் வங்கியில் உபரியாக இருக்கும் சுமார் 2 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு தொடர்ந்து கேட்டு வருகிறது. அந்த இரண்டு லட்சம் கோடி ரூபாயைக் கொடுக்க மறுத்த காரணத்தினால் தான் அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பதவி விலகினார். இப்படி நீதித்துறை இக்கட்டான சூழலில் இருப்பதால் எதிர்க்கட்சியினரின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதால்தான் பியூஸ் கோயல், அமித்ஷா போன்ற சீனியர்கள் நிதியமைச்சர் பதவியை பெற ஆர்வம் காட்டவில்லை. ஆனால் இதனை சவாலாக எடுத்துக்கொண்டு நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராகி உள்ளார்.

click me!