நெய்வேலியில் பரபரப்பு... விஜய் ரசிகர்களை விரட்டி விரட்டி வெளுத்து வாங்கிய அதிரடிப்படை..!

By Thiraviaraj RMFirst Published Feb 8, 2020, 6:15 PM IST
Highlights

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள விஜயை காண அவரது ரசிகர்கள் கூடியதால் அவர்களை, போலீஸாரும், அதிரடிப்படையினரும் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். 
 

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள விஜயை காண அவரது ரசிகர்கள் கூடியதால் அவர்களை, போலீஸாரும், அதிரடிப்படையினரும் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். நெய்வேலியில் விஜய் படப்பிடிப்பை நடத்தக்கூடாது  என பாஜகவினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் தமிழகத்தின் மூலைமுக்குகளில் இருந்தெல்லாம் கிளம்பி நெய்வேலியில் திரண்டு வருகின்றனர்.

திரையுலகையும், அரசியல் உலகையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது விஜய் மற்றும் அவர் மீதான வருமான வரித்துறை நடவடிக்கை. படப்பிடிப்பு தளத்துக்கே வந்து அள்ளிச் சென்றனர் அதிகாரிகள். பெரும் சர்ச்சை, பரபரப்பு என அந்த அதிரடிகள் ஒரு வழியாக முடிந்து மாஸ்டர் படப்பிடிப்பு மீண்டும் நெய்வேலியில் தொடங்கி இருக்கிறது. ஆனால், பாஜக விடுவது போல் இல்லை. என்எல்சி பகுதிக்கே சென்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விஜய் மீது தொடுக்கப்பட்டுள்ளது வெறும் ரெய்டு அல்ல. அது ஒரு நியாயம் அற்ற போர். யார், எதற்காக இந்த போரை விஜய் மீது ஆரம்பித்து உள்ளார்கள்?

தகவல் அறிந்த ரசிகர்களும் குவிய, கடைசியில் அந்த விவகாரம் சர்ச்சையில் முடிந்திருக்கிறது. ஆனாலும் விஜய் ரசிகர்களின் கோபம் குறையவில்லை. விஜய் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு கார்களில் அணிவகுத்து நெய்வேலியில் குவிந்துள்ளனர். போராட்டம் நடத்திய பாஜகவினர் இப்போது வரலாம் என அவர்கள் சவால் விடுத்து இருந்தனர். இந்நிலையில் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு முன் விஜயை காண காலை முதலே அவரது ரசிகர்கள் பல்வேறு ஊர்களில் இருந்தும் திரண்டனர். 

படப்பிடிப்பு முடிந்ததும் விஜய் வெளியில் வருவார். அவரைப்பார்க்கலாம் என ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்கள் கூடிய பகுதி பாதுகாப்பான பகுதி என்பதால் ரசிகர்களை போலீஸாரும், அதிரடிப்படையினரும் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். 
 

click me!