புதிதாக பதவி ஏற்ற அமைச்சர்கள் ஒரு பார்வை-…‘அன்று ஐ.பி.எஸ். அதிகாரி இன்று அமைச்சர்’

First Published Sep 3, 2017, 7:22 PM IST
Highlights
New central ministry

கடந்த 1980ம் ஆண்டு மஹாராஷ்டிரா ஐ.பி.எஸ். கேடர் அதிகாரி சத்யபால் சிங். 1955ம் ஆண்டு, நவம்பர் 29-ந்தேதி மீரட் மாவட்டம், பாசுலி கிராமத்தில் சத்யபால்சிங் பிறந்தார்.

மும்பை மாநகர போலீஸ் ஆணையராக இருந் 61 வயதான சத்யபால் சிங் வேலையை ராஜினாமாசெய்து, பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார். அதன்பின் தேர்தலில் நின்று எம்.பி. ஆனவர், இப்போது மத்திய இணை அமைச்சராக உயர்ந்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினைகளுக்காக பல முறை குரல்கொடுத்துள்ளார், விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகையையும் அளிக்கக் கோரி பலமுறை சத்யபால் சிங் குரல் கொடுத்தள்ளார்.

ஐ.பி.எஸ். அதிகாரி ஆன பின் முதலில் நாசிக்கில் துணை போலீஸ் சூப்பிரண்டாக சத்யபால் சிங் பொறுப்பேற்றார். அதன்பின், மும்பையில் போலீஸ் தலைமை அதிகாரி, மஹாராஷ்டிரா போலீஸ் டி.ஜி.பி., குற்றப்பிரிவு போலீஸ் இணை ஆணையர் ஆகிய பதவிகள சத்யபால் சிங் வகித்தார்.

இவர் மும்பையில் போலீஸ் ஆணையராக 1990களில் இருந்தபோது, மாபியா கும்பல்களைகளையும், திரைமறைவில் ரவுடித்தொழில் செய்பவர்களை ஒழிக்க தீவிரம் காட்டினார். சோட்டா ராஜன், சோட்டா சகீல், அருண் கவ்லி கேங்க் ஆகிய கூட்டத்தினரை ஒடுக்கினார்.

===============

‘பீகாரின் மைந்தன் அஸ்வினி குமார்’

பீகாரில் சட்டசபை உறுப்பினராக தொடர்ந்து 5 முறை தேர்வானர் அஸ்வினி குமார் சவுபே. பீகாரில் பா.ஜனதாவின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாகவும், பிராமண சமூகத்தையும் சேர்ந்தவர். கடந்த 1953ம் ஆண்டு, ஜனவரி 2-ந்தேதி பாகல்பூர் மாவட்டம், தரியாப்பூரில் அஸ்வினி குமார் பிறந்தார். அரசியல்வாதி, சமூக ஆர்வலர் மற்றும் விவசாயியாக மக்கள் மத்தியில் அறிமுகமானார். விலங்கியலில் இளநிலை பட்டப்படிப்பு முடித்த சவுபே இளம் வயதிலையே அரசியலுக்கு வந்தார். ஜனதா கட்சியில் சேர்ந்து மிசா தடைச் சட்டத்தில் சிறை சென்றவர், அகில பாரதிய வித்யார்த்தி அமைப்பில் கடந்த 1974 முதல் 1987 வரை இருந்தனர்.

64 வயதான சவுபே, பீகாரில் பக்சர் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்வானவர். இவரின் தொகுதியில் மோடியின் தூய்மை திட்டத்தின் கீழ் 11 ஆயிரம் கழிப்பறைகள் கட்டிக் கொடுத்துள்ளார்.

==========

அரசு அதிகாரியாகி அமைச்சரானவர்

கடந்த 1974ம் ஆண்டு ஐ.எப்.எஸ். அதிகாரி ஹர்தீப் சிங் பூரி. 40 ஆண்டுகளாக மத்திய அரசின் வௌியுறவுத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐ.நா.வுக்கான இந்தியத் தூதராகவும், நியூயார்க், ஜெனிவாவில் ஐ.நாயாவுக்கான நிரந்தர இந்திய தூதராக 2002 முதல் 2013 வரை ஹர்திப் சிங் இருந்தார். இளம் வயதில் ஜனதா கட்சியில் தீவிரமாக இருந்தார், முதுநிலைபடிப்பு முடித்தபின், சிறிது காலம் டெல்லி ஸ்டீபன் கல்லூரியில் கல்விப்பணியாற்றி, அதன்பின் ஐ.எப்.எஸ். தேர்ச்சி பெற்றார்.

===========

எளிமையான தலித் தலைவர்

மத்தியப் பிரதேசத்தின் திகம்கார்க் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் வீரேந்திர குமார். தொடர்ந்து 6-வது முறையாக எம்.பி.ஆனவர்.  சிறுவயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தோடு நெருங்கிய தொடர்பு உடையவர். 63 வயதான வீரேந்திர குமார் மிகவும் எளிமையானவர் என பா.ஜனதா கட்சியின் கூறுகிறார்கள். டெல்லியில் இருந்து சொந்த தொகுதிக்கு சென்றால் கூட, வீரேந்திர குமார் சாதாரண மக்களைப் போன்று ரிக்‌ஷாவில் வந்து இறங்குவார், தொகுதிக்குள் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டரில் வலம் வந்து மக்களிடம் குறை கேட்கும் வீரேந்திரகுமா, பாதுகாப்புகுறித்து கவலைப்படாதவர்.

கடந்த 1954ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி பிறந்த விரேந்திர குமார், முதுநிலை பொருளாதாரமும், குழந்தை தொழிலாளர் பிரிவில் டாக்டர் பட்டத்தையும பெற்றுள்ளார். 1982ம் ஆண்டு அரசியலில் இணைந்த வீரேந்திர குமார், பா.ஜனதாவின் தேசிய, மாநில, உள்ளாட்சி அரசியலில் தீவிரமாக பங்காற்றி, அமைச்சராக உயர்ந்துள்ளார்.

=============

அத்வானியை கைது செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமைச்சர்

கடந்த 1975ம்ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.ேக.சிங். ஏறக்குறைய 40 ஆண்டுகள் மத்திய அரசு  பணியில் இருந்தார். 64 வயதான ஆர்.கே.சிங், கடந்த 1990ம் ஆண்டு வௌிஉலகுக்கு தெரிந்தார். 19990ம் ஆண்டு பீகாரின் சமஸ்திபூரில் ரதயாத்திரை மேற்கொண்ட அத்வானியை கைது செய்து ஆர்.கேசிங் பிரபலம் அடைந்தார். பீகாரிலும், மத்திய அரசிலும் பல்வேறு பதவிகளை ஆர்.கே.சிங் வகித்துள்ளார். 2013ம் ஆண்டு ஓய்வு பெற்றபின், பா.ஜனதாவில்இணைந்து, 2014ம்ஆண்டு ஆரா தொகுதியல் போட்டியிட்டு ஆர்.கே.சிங் ெவற்றி பெற்றார். போலீஸ்நிலையங்கள், சிறைகள் ஆகியவற்றை நவீனப்படுத்தும் திட்டங்கள், பேரழிவு மேலாண்மையில் இவரின் திட்டங்கள் அரசுக்கு இவரை அடையாளம் காட்டியது.

மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப், நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு ஆகியோரை தூக்கிலிடும் போது, ஆர்.கே.சிங் மத்திய உள்துறை செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

==========

அமைச்சரவையில் புதிய முகம்

உத்தரப்பிரதேசம் கோரப்பூர் நகர் அருகே ருத்ராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 65வயதான சிவபிரதாப் சுக்லா. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சுக்லா, இளநிலை சட்டப்படிப்பை கோரக்பூர் பல்கலையில் முடித்தார். 1970ம் ஆண்டு முதல் பா.ஜனதாவின் ஏ.பி.ஏ.பி. இயக்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். மாணவர்கள் போராட்டத்தின் போது பலமுறை சுக்லா சிறை சென்றுள்ளார். மிசா தடைச் சட்டத்தில் 19 மாதங்கள் சிறையில் இருந்தார்.  உத்தரப் பிரதேசத்தில் 1989ம் ஆண்டு எம்.எல்.ஏ.வாகத் தேர்வாகி,தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்றார். பா.ஜனதா அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தார். 2012ம் ஆண்டு மாநில பா.ஜனதா துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். 

மாநிலங்கள் அவை உறுப்பினராகத் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டு, இப்போது, முதல் முறையாக அமைச்சர் பதவியைப் பெற்றுள்ளார்.

பிராமண சமூகத்தைச் சேர்ந்த சுக்லா, 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து உயர்சமூகத்தின் ஆதரவைப் பெறும் நோக்கில் அமைச்சர் வாய்ப்பு பெற்றுள்ளார்.

அமைச்சரவையில் முதல் கிறிஸ்தவர்

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் மின்சார வசதிகூடஇல்லா மணிமாலா கிராமத்தில் பிறந்தவர் அல்போன்ஸ் கண்ணன்தனம். 1979ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பேட்ஜ் அதிகாரியான இவர் பல்வேறு மாவட்டங்களில் கலெக்டராக பணிபுரிந்துள்ளார். ஐ.ஏ.எஸ்.  பதவியை ராஜினாமா செய்த கண்ணன்தனம், முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன் காஞ்சரப்பள்ளி தொகுதியில் எம்.எல்.ஏ. ஆனார். ஊழலை ஒழிப்பதில் தீவிரமாக செயல்பட்ட கண்ணன்தனம், 2011ம் ஆண்டு பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார். இவர் கோட்டயம் மாவட்ட கலெக்டராக இருந்தபோது, கல்வி இயக்கத்தை சிறப்பாகச் செயல்படுத்தி, 1989ம் ஆண்டு, நாட்டிலேயே 100 சதவீதம் கல்விஅறிவு பெற்ற முதல்நகரம் என்ற பெருமையைப் பெற்றுத்தந்தார். 

மேலும், டெல்லி மேம்பாட்டு ஆணையத்தில் பணிபுரிந்துள்ள கண்ணன்தனம், தேசிய கல்விக் கொள்கையை வடிவமைத்ததில் முக்கியப் பங்காற்றினார் கடந்த 1994ம் ஆண்டு டைம் பத்திரிகையில் 100 சிறந்த இளம் தலைவர்களில் இவரும் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார்.  பிரதமர் மோடியின் அமைச்சரவையில் முதல் கிறிஸ்துவர் அல்போன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 

=============
தீவிர ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்


கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய அரசியல்வாதி ஆனந்த்குமார் ஹெக்டே. கடந்த 1968ம் ஆண்டு, மே 20ந்தேதி உத்தர கன்னடாவில் பிராமண குடும்பத்தில் ஆனந்தகுமார் பிறந்தார். மாநில பா.ஜனதா துணைத்தலைவராக இருக்கும் ஆனந்தகுமார், கிராமமேம்பாட்டுக்கான கடம்பா தொண்டு அமைப்பை நிறுவினார். 

அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துவார். கடந்த ஜனவரி மாதம் மருத்துவர் ஒருவர் சரியாக சிசிச்சை அளிக்கவில்லை எனக் கூறி ஆனந்தகுமார் அவரை தாக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். தீவிரவாதத்துடன்,முஸ்லிம் மதத்தை தொடர்பு படுத்தி பேசி சர்ச்சையில் சிக்கினார்.

 தீவிர ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக ஆனந்த் குமார் ஹெக்டே, உத்தர கன்னடா மக்களவைதொகுதியில் இருந்து 5 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  28 வயதிலேயே எம்.பி.யான ஆனந்தகுமார், தற்போது, நாடாளுமன்றத்தின் மனித வள மற்றும் வௌியுறவு விவகாரத்தின் நாடாளுமன்ற நிலைக்குழுவில் உள்ளார். 

 

 

 

 

click me!