#BREAKING சட்டப்பேரவையில் தரமான சம்பவம்... முதல்வர் ஸ்டாலின் கேட்ட ஒரே கேள்வி... வாயடைத்து போன பாஜக..!

By vinoth kumarFirst Published Jun 23, 2021, 1:58 PM IST
Highlights

அனைத்துத் தரப்பும் நீட் விலக்குக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், இதற்கு பாஜக ஆதரவு குரல் கொடுக்கத் தயாரா என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. இதற்கு பாஜக குரல் கொடுக்க தயாரா என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பான விவாதம் 2வது நாளாக நடைபெற்று வருகிறது. அப்போது, பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நகேந்திரன் நீட் தேர்வு விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பினார். 

அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து பதிலளித்தார். அப்போது, தமிழகத்திற்கு நீட் விலக்கு வேண்டும் என்பதில், ஆளும் கட்சி உறுதியாக இருக்கிறது எனவும், எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவும் அதே நிலைப்பாட்டில்தான் இருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், நீட் விலக்கு கோரி, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் கூறினார். அனைத்துத் தரப்பும் நீட் விலக்குக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், இதற்கு பாஜக ஆதரவு குரல் கொடுக்கத் தயாரா என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், சட்டத்திற்கு உட்பட்டு விதி விலக்கு தரப்பட்டால் பாஜக ஆதரவு தர தயார் என குறிப்பிட்டார்.

click me!