நீட் தேர்வு: திமுக பிணம் தின்னும் அலைவதாக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாய்ச்சல்.!

Published : Sep 17, 2020, 07:33 AM IST
நீட் தேர்வு:  திமுக பிணம் தின்னும் அலைவதாக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாய்ச்சல்.!

சுருக்கம்

  அரசியல் கட்சியினர் பிணம் தின்னும் கழுகுகளை போல் அலைகின்றனர். அரசியல் கட்சியினருக்கு குழப்பம் இருப்பது நீட் தேர்வு குறித்து இல்லை.

அரசியல் கட்சியினர் பிணம் தின்னும் கழுகுகளை போல் அலைகின்றனர். அரசியல் கட்சியினருக்கு குழப்பம் இருப்பது நீட் தேர்வு குறித்து இல்லை. 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து தான் அவர்களுக்கு குழப்பம்.எனவே மாணவர் சமுதாயம் இவர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்.என பொன்.ராதாகிருஷ்ணன் திமுக உள்ளிட்ட கட்சிகள் மீது பொங்கியெழுந்துள்ளார்.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் 70-அடி உயர பாஜக கொடி ஏற்றப்பட்டது.இந்த விழாவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து ஏழை, எளியோருக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்... 
"நீட் தேர்வு விவகாரத்தில் அச்சத்தில் மாணவர்கள் உயிரிழப்பது வேதனைக்குறியது. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினர் பிணம் தின்னும் கழுகுகளை போல் அலைகின்றனர். அரசியல் கட்சியினருக்கு குழப்பம் இருப்பது நீட் தேர்வு குறித்து இல்லை. 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து தான் அவர்களுக்கு குழப்பம்.எனவே மாணவர் சமுதாயம் இவர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் பேசி வருகின்றனர். மூன்று தலைமுறையாக திமுக பிணம் தின்னும் அரசியல் செய்து வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அவர்கள் கூறுவதன் மூலம், நீட் தேர்வு குறித்து முடிவு செய்வது மாநில முதல்வரா? அல்லது நாட்டின் பிரதமரா? என்று கூட அவர்களுக்கு தெரியவில்லை என்பது தெரிகிறது.சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுகவினர், மாநிலத்தில் நடைபெறும் பிரச்சனைகளை முன்வைத்தனர் என்றால் பயனுள்ளதாக இருக்கும். இல்லையென்றால் பேசாமல் இருப்பதே நல்லது.

PREV
click me!

Recommended Stories

இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!