நமோவின் கோபாலபுர விசிட்: பின்னணியில் சபரீசன்!?

First Published Nov 11, 2017, 5:36 PM IST
Highlights
narendra modi visit Gopalapuram behind Sabarisan


கடந்த 3 நாட்களாக தமிழகத்தை புரட்டிக் கொண்டிருக்கும் வருமான வரித்துறை ரெய்டையும் கடந்து இன்னமும் சென்சிடீவாக ஓடிக் கொண்டிருக்கிறது கருணாநிதியை மோடி சந்தித்த விஷயம். 

இந்நிலையில் கருணாநிதியை மோடி சந்திக்கும் திட்டத்தில் பி.ஜே.பிக்கும் - தி.மு.க.வுக்கு இடையில் பாலமாக இருந்த தி.மு.க. புள்ளி யார்? என்கிற கேள்விக்கான விடை இப்போது ஒரு உறுதிபடுத்தப்படாத தொனியில் வெளியே தெரிய துவங்கியிருக்கிறது. அது ஸ்டாலினின் மருமகன் சபரீசன்! என்கிறார்கள்.

நமக்கு நாமே! வை வடிவமைத்தது சபரீசன் தான். நமக்கு நாமேவின் போது ஸ்டாலினின் டிரெஸ் வழக்கமான வேஷ்டி வெள்ளை சட்டையிலிருந்து மாறி, ஜீன் - கலர்ஃபுல் சர்ட்ஸ் என்றெல்லாம் பிக்ஸ் செய்திருந்ததும் சபரீதான். 

கடந்த பொது தேர்தலுக்கு முன் தி.மு.க. வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள் எவையெவை? என்று ஒரு டீமை வைத்து சர்வே எடுத்ததும் சபரீதான், கூடவே கணிசமான தொகுதிகளில் தி.மு.க.வின் வேட்பாளர்களை நிர்ணயித்ததே இவர்தான் என்கிறார்கள். 

இந்நிலையில் சபரீசன் தான் மோடியின் கோபாலபுர விசிட் சர்ப்பரைஸுக்கும் பின்னணி என்கிறார்கள். ஒரு காலத்தில் கருணாநிதிக்கான டெல்லி பிரதிநிதியாக அவரது அக்காள் மகன் முரசொலி மாறன் இருந்தார். இப்போது ஸ்டாலினின் டெல்லி பிரதிநிதியாக அவரது சொந்த மருமகன் சபரீசன் இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

ஆனால் சபரீசன் வெளிப்படையான அரசியலுக்கு வராத நிலையில், தி.மு.க.வின் மதுரை எம்.எல்.ஏ.வும் ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவருமான பி.டி.ஆர். தியாகராஜனை வைத்து டெல்லியில் சபரீ மூவ் செய்து கொண்டிருக்கிறார். தியாகுவும் சபரீயின் அஸைன்மெண்ட்கள் அத்தனையையும் பக்காவாக முடித்துக் கொடுத்துவிட அதன் நீட்சியாகத்தான் மோடி விசிட் அஸைன்மெண்ட் அவரது கைகளுக்கு தரப்பட்டது என்கிறார்கள். 

டெல்லியில் யாரிடம், எப்படி மூவ் செய்து  பிரதமரின் விசிட்டை ஓ.கே. செய்ய வேண்டுமென்று சபரீசன் ஸ்கெட்ச் போட்டுக் கொடுக்க அதை அப்படியே தியாகு நிறைவேற்றியிருக்கிறார் என்கிறார்கள். 

இந்த ப்ராஜெக்ட் சக்ஸஸ் ஆனதில் மருமகன் மீது மாமனார் ஸ்டாலினுக்கு செம மரியாதையாம்!

இருக்காதா பின்னே!

click me!