மீண்டும் இணையும் ஜோடி...! தேவைப்பட்டால் வைகோவுடன் இணைந்து செயல்படுவேன்...! நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேட்டி

Asianet News Tamil  
Published : Jun 06, 2018, 11:47 AM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
மீண்டும் இணையும் ஜோடி...! தேவைப்பட்டால் வைகோவுடன் இணைந்து செயல்படுவேன்...! நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேட்டி

சுருக்கம்

Nanjil Sampath interview

மதிமுக பொது செயலாளர் வைகோவுடன் இணைந்து செயல்பட தயார் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த நாஞ்சில் சம்பத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பேட்டியின்போது பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் பிதாமகன், கதாநாயகன் வைகோதான் என்று புகழாரம் சூட்டினார். தேவைப்பட்டால்
மக்களுக்காக வைகோவுடன் இணைந்து போராட தயார் என்றார்.

தனியார் தொலைக்காட்சி பேட்டிக்கு முன்னதாக நாஞ்சில் சம்பத், தனது டுவிட்டர் பக்கத்தில், மக்கள் மன்றத்திலும் நீதி மன்றத்திலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. 

இப்பொழுது நீதிமன்றத்தின் வாசலிலும் அரசாங்கத்தின் தாழ்வாரங்களிலும் தவம் கிடக்கிறது வேதாந்தா நிர்வாகம். இப்பொழுது மூடி இருப்பது இடைக்கால
ஏற்பாடு.

இன்னொருநாள் அது மூடப்படும். அப்போது ஸ்டெர்லைட் நாயகன் வைகோவிற்கு தூத்துக்குடி மக்களே விழா எடுப்பார்கள். குட்டிச்சுவர்கள் ஒருகாலமும் கோபுரம் ஆவதில்லை. குட்டை ஒருக்காலும் சமுத்திரம் ஆவதில்லை என்று அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது, தற்போது, தேவைப்பட்டால் மீண்டும் வைகோவுடன் இணைந்து செயல்பட தயார் என அவர் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் மீண்டும் மதிமுகவில் இணைந்து செயலபடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

காவி உடையில் சிங்கம்..! மோடி- யோகியை ஆதரிப்பதால் என் சமூகம் ஒதுக்குகிறது..! தௌகீர் அகமது வேதனை..!
தூக்கத்திலும் நடுக்கம்... படுக்கையிலும் குண்டு துளைக்காத ஜாக்கெட் அணியும் பாகிஸ்தான் அசிம் முனீர்..!