பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை நினைவிடத்தில் பாஜக தலைவர் முருகன் மரியாதையின்றி அனுப்பப்ட்டாரா?

By T BalamurukanFirst Published Oct 31, 2020, 9:39 AM IST
Highlights

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் மரியாதையின்றி அனுப்பப்பட்டாரா? அதற்கு அவர் சாதிதான் காரணமா.? என்கிற விவகாரம் தற்போது வெடிக்க ஆரம்பித்துள்ளது.
 


பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் மரியாதையின்றி அனுப்பப்பட்டாரா? அதற்கு அவர் சாதிதான் காரணமா.? என்கிற விவகாரம் தற்போது வெடிக்க ஆரம்பித்துள்ளது.

முத்துராமலிங்க தேவரின் 113-வது பிறந்தநாள், 58-வது குருபூஜையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா நடைபெற்றது. இதில் அதிமுக ஈபிஎஸ், ஓபிஎஸ், திமுக ஸ்டாலின், அமமுக தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பாஜக சார்பில் தேவர் நினைவிடத்திற்குள் எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் ஆகியோர் விஜயம் செய்தனர். சிறிது நேரத்திற்குள் எல்.முருகனும் தேவருக்கு மரியாதை செலுத்த வந்துவிட்டார்.. அஞ்சலி செலுத்திய தலைவர்களுக்கு நினைவிடத்தின் நிர்வாகிகள் துண்டு, மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள். அதன்படி எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின், தினகரனுக்கு மாலை போட்டு மரியாதை செய்வது அங்குள்ள வழக்கம்.


ஆனால் பாஜக முருகன், ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன் மூவரில் யாருக்கு நன்றி மரியாதை செய்வது என்று குழப்பம் அங்குள்ளவர்களுக்கு வந்தது. எச்.ராஜா ஏதோ அங்குள்ள பூசாரியிடம் சொன்னதும், தற்போது கட்சியின் எந்த பொறுப்பிலும் இல்லாத ஹெச்.ராஜாவிற்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. இதனை பார்த்த பாஜக தலைவரான எல்.முருகன் உடனே அங்கிருந்து திரும்பிச் செல்ல முயன்றார். இதைக் கவனித்த நயினார் நாகேந்திரன் பூசாரியிடம் ஒரு துண்டை வாங்கி, எல்.முருகன் கழுத்தில் போட்டு அவரை சமாதானம் செய்தார். தேவர் சாதியத்தலைவர் அல்ல அவர் தேசியத்தலைவர். அனைத்து மக்களுக்கான தலைவர்.சொல்லப்போனால் தலித் மக்களுக்காக பல்வேறு நன்மைகளை செய்தவர் தேவர்.இப்படி இருக்கும் போது சாதியின் பெயரால் ஒரு கட்சியின் தலைவரை அவதிக்க கூடாது என்கின்றனர் பாஜக நிர்வாகிகள்.

click me!