தனித்து நின்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்... தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தாறுமாறு கணிப்பு...!

Published : Aug 31, 2020, 10:05 PM IST
தனித்து நின்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்... தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தாறுமாறு கணிப்பு...!

சுருக்கம்

தற்போது நாங்கள் (பாஜக) தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறுவோம் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக இளைஞரணி மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக தலைவர் எல். முருகன் பங்கேற்றார். முன்னதாக செய்தியாளர்களை எல்.முருகன் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ மும்மொழி கொள்கையில் அரசியல் கட்சியினர் அரசியல் செய்யக் கூடாது. அரசியல் கட்சியில் யார் வேண்டுமானாலும் சேரலாம்.கட்சியில் இணைந்த பிறகுதான் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதே முக்கியம். தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி இடையேயான உறவு சிறப்பாக உள்ளது. எங்கள் கூட்டணியில் எந்தச் சிக்கலும் இல்லை.
தற்போது நாங்கள் 60 இடங்களில் தனித்து நின்றாலும்கூட வெற்றி பெறுவோம். ராமரா, முருகனா என்பதெல்லாம் இங்கே முக்கியம் அல்ல. இருவரும் கடவுள்தாம். கந்த சஷ்டி குறித்து கறுப்பர் கூட்டம் அவதூறு பரப்பியதால்தான் நாங்கள் போராடினோம். கறுப்பர் கூட்டம் பின்னனியில் திமுக உள்ளதா என்பது குறித்து மு.க. ஸ்டாலின் விளக்க வேண்டும்” என்று எல்.முருகன் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!