முரசொலி அலுவலகத்தை சீல் வையுங்கள்... பகீர் கிளப்பும் பொன்னார்..!

By vinoth kumarFirst Published Nov 8, 2019, 4:36 PM IST
Highlights

உலகத்தில் எங்கேயாவது திருவள்ளுவர் சிலை நின்ற கோலத்தில் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். கன்னியகுமரியில் நின்ற கோலத்தில் திருவள்ளுவர் சிலையை திமுக வைத்தது எவ்வளவு பெரிய தவறு என்றார். 

முரசொலி ஆவணத்தை திமுக ஒப்படைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தற்காலிகமாக முரசொலி அலுவலகத்தை சீல் வைக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் அமமுக மாநில அமைப்பு செயலாளர் சி.ஏழுமலை அக்கட்சியிலிருந்து பிரிந்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் உலகத்தில் எங்கேயாவது திருவள்ளுவர் சிலை நின்ற கோலத்தில் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். கன்னியகுமரியில் நின்ற கோலத்தில் திருவள்ளுவர் சிலையை திமுக வைத்தது எவ்வளவு பெரிய தவறு என்றார். 

இதையும் படிங்க;- 

திருவள்ளுவர் பற்றி அரசியலாக்குவது வேதனைகுரிய வி‌ஷயமாகும். திருவள்ளுவரை பாஜக சொந்தம் கொண்டாடவில்லை. காவி நிறம் என்பது பாஜகவின் நிறம் அல்ல அது ஓரு பொதுவான நிறம். திருவள்ளுவரின் அடையாளத்தை திமுகவினர் அழிக்க நினைக்கின்றனர்.

இதையும் படிங்க;- 

மேலும், பேசிய அவர் உரிய நேரத்திற்கு முன்பு முரசொலி ஆவணத்தை திமுக ஓப்படைக்க வேண்டும். இல்லையென்றால் தற்காலிகமாக முரசொலி அலுவலகத்தை சீல் வைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

click me!