நாளை முதல் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி... முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Aug 19, 2020, 6:09 PM IST
Highlights

மகாராஷ்ராவில் நாளை முதல் மீண்டும் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து தொடங்கப்படும் என முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். 

மகாராஷ்ராவில் நாளை முதல் மீண்டும் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து தொடங்கப்படும் என முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். 

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் போக்குவரத்து சேவைகள் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 6,15,477 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 20,687 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு மகாராஷ்டிராவில் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து சேவைக்கு அம்மாநில முதல்வர் அனுமதி அளித்துள்ளார். இந்த பயணத்திற்கு இ- பாஸ் தேவையில்லை. இருப்பினும் பயணிகளுக்கான புதிய விதிமுறைகளை போக்குவரத்து கழகம் விரைவில் அறிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!