டெல்லி வன்முறையில் இந்து பெண் கற்பழித்து, துண்டு துண்டாக வெட்டி கொலை..?? உண்மையில் நடந்தது என்ன?

By Thiraviaraj RMFirst Published Mar 5, 2020, 12:13 AM IST
Highlights

இந்திய தலைநகரான, டெல்லி வடகிழக்கு பகுதியில் நடந்த வன்முறையில் ஜோதி பட்டிடர் என்ற இளம்பெண்ணை ஆம் ஆத்மி கட்சியினர் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக சஞ்சித் சர்க்கார் தனது ட்விட்டர் கணக்கில் பதிவு செய்திருக்கிறார்,
 

T.Balamurukan

 இந்திய தலைநகரான, டெல்லி வடகிழக்கு பகுதியில் நடந்த வன்முறையில் ஜோதி பட்டிடர் என்ற இளம்பெண்ணை ஆம் ஆத்மி கட்சியினர் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக சஞ்சித் சர்க்கார் தனது ட்விட்டர் கணக்கில் பதிவு செய்திருக்கிறார்,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி வடகிழக்கு பகுதிகளில் நடந்த போராட்டத்தில்  வன்முறையில் 45 க்கும் மேற்பட்டவர்  பலியாகி இருக்கிறார்கள்.. அந்த உயிரிழிப்பில் உளவுத்துறை போலீஸ் 'அங்கித் சர்மா'வின் மரணம் மருத்துவர்களால் கூட விவரிக்கமுடியாத அளவில் அவரை கொலை செய்திருக்கிறது அந்த கும்பல். சுமார்  6 மணி நேரம் வரை துன்புறுத்தி சுமார் 400 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியானது அனைவரது மனதையும் பதைபதைக்க வைத்தது. இன்னும் அந்த சம்பவத்தை மக்கள் மனதில் இருந்து அகலவில்லை. 
 அங்கித் சர்மாவை ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் தஹிர் ஹுசைன் ஆட்கள்தான் கொலை செய்ததாக அவருடைய தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 கடந்த 2 ஆம் தேதி ட்விட்டரில் ஜோதி பட்டிடர் என்ற இந்து பெண்ணை தஹிர் ஹுசைன் ஆட்கள் வன்கொடுமை செய்து கொலை செய்து, உடல் பாகங்களை வெட்டி கழிவு நீர் கால்வாயில் வீசியதாக சஞ்சித் சர்க்கார் என்ற ட்விட்டர் கணக்கில் பதிவு செய்யப்பட்டது.  அந்த பதிவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் டேக் செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவு  வாட்சப் உள்ளிட்ட வலைத்தளங்களுக்கும் பரவி சர்ச்சைக்குள்ளானது. தஹிர் ஹுசைன் ஆட்களால் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஜோதி பட்டிடர் மத்திய பிரதேசம் மாநிலம், பர்சூலிய கல கிராமத்தில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தவர். டெல்லி கலவரம் நடந்த  மூன்று நாட்களுக்கு முன்பு அவர் தன்னுடைய வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ளார். ஆனால் அவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு உடல் பாகங்களை வெட்டி வீசியதாக செய்திகள் பரவியது. அந்த மாணவியின் புகைப்படம் இணையத்தில் முதலில் எப்போது வெளியானது குறித்து கூகுளில் தேடப்பட்டபோது, '' அவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த செய்தியை Bhaskar.com என்ற வலைத்தளம் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியிட்டிருப்பதை அறிய முடிந்தது. இதுகுறித்து லோக்கல் போலீசாரும் தற்கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். 

அந்த விசாரணையும் தற்போது நடந்து வருகிறது. ஆகையால் எங்கோ ஒரு வீட்டில் இறந்த பெண்ணின் புகைப்படத்தை தற்போது இணையத்தில் வெளியிட்டு பரப்பி வருகிறார்கள். இதுபோன்ற பதிவுகள் தேவையற்ற சச்சரவுகளை ஏர்படுத்தும். எனவே பொதுமக்கள் இதுபோன்ற வதந்தியான தகவல்களை நம்ப வேண்டாம்.
 

click me!