ராவணன் -திருமாவிடம், ராமன் -மோடி தோற்ற தினமாம்... கொண்டையை மறைக்க #மே23_சனாதனம் கதறிய நாள்..!

By Thiraviaraj RMFirst Published May 23, 2020, 2:43 PM IST
Highlights

ஒட்டுமொத்தமாக ஒன்பது தலைகளை வெட்டி வீழ்த்திய ராமன் மோடியால் இந்த பத்தாவது தலை ஒத்த தல ராவணன் திருமாவளவன் அவர்களிடம் தோற்று ஓடிய தினம்

வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக எம்.பி., ஆர்.எஸ்.பாரதி குறித்து கருத்துக்கூறாமல் திருமாவளவன் இருந்து வரும் நிலையில் அதனை மறைக்க #மே23_சனாதனம் கதறிய நாள் என்கிற ஹேடேக்கை உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர் விசிக ஆதரவாளர்கள்.

 

"தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிஅது திமுக பிச்சை போட்டதாக ஆர்.எஸ்.பாரதி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அடுத்து தயாநிதிமாறன், நாங்கள் என்ன மூன்றாம் தர, தாழ்த்தப்பட்ட மக்களா? எனப்பேசியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைகள் ஓய்வதற்குள் ஒரு விவாத நிகழ்ச்சியில்,  முடி திருத்துவதை "அம்பட்டையன் கடை" என்று சாதியை வைத்து இழிவாகக் பேசினார் திமுக எம்.எல்.ஏ., பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். இதுவும் சர்ச்சையாக வெடிக்க, சமூகநீதி, சமத்துவம் என வெளியே வேடம் போடும் திமுகவினர் தொடர்ந்து இப்படி சாதிவன்மத்தோடு பேசுவது எல்லாம் என்ன நியாயம்? என நாலாபுறமும் கேள்விகள் எழுந்தன. 

இதனை அடுத்து இன்று காலை பட்டியலின மக்களை இழிவாக பேசிய வழக்கில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார். இதனை அடுத்து தாங்களும் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்படலாம் என்பதால் திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன்  ஆகியோர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். தங்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக்கோரியுள்ளனர். பிற்பகலில், காணொலி மூலம் நீதிபதி நிர்மல்குமார் மனுவை விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஆனால் இந்த கைது குறித்து திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் கருத்து கூறவில்லை.

சமுதாய காவலன் கருத்துக் கூறாதது ஏன் என பலரும் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தை மறைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ட்விட்டர் பக்கத்தில் #மே23_சனாதனம்கதறியநாள் என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்டாக்கி வருகின்றனர். அதாவது கடந்த மே-23ம் தேதி எம்.பியாக வெற்றி பெற்ற நாளான இன்று #மே23_சனாதனம் கதறிய நாள் என்று கூறி ஹேஷ்டேக்கை ட்ரண்டாக்கி வருகின்றனர். அதில், ‘’ஒட்டுமொத்தமாக ஒன்பது தலைகளை வெட்டி வீழ்த்திய ராமன் மோடியால் இந்த பத்தாவது தலை ஒத்த தல ராவணன் திருமாவளவன் அவர்களிடம் தோற்று ஓடிய தினம்’’என்றெல்லாம் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

சனாதனம் வீழும்!
பௌத்தம் மீண்டெழும்..!... 🔥 pic.twitter.com/KoGXoRzt3w

— Mathi Aadhavan (@aaadhavan_VCK)

https://t.co/5LlEqFMkBo

— 𑀫𑀼𑀢𑁆𑀢𑀫𑀺𑀵𑁆_செல்வன் (@Raja_Muthamil)


 

 

click me!