
24 லட்சம் பேர் மட்டுமே 10 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுவதாக ஒப்புதல் : மாேடி கவலை!
3 மாதங்களில் 3 கோடி விவசாயிகளின் கிசான் அட்டைகள் ரூபே கார்டுகளாக மாற்றப்படும் என நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புத்தாண்டையொட்டி பிரதமர் மோடி, தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் திபாவளிக்கு பின் நாட்டில் கருப்பு பணத்துக்கு எதிராக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தியாவை தூய்மைபடுத்தும் நடவடிக்கைக்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு அளித்து வருவதாக கூறினார். மேலும் பணத்தை எடுக்க மக்கள் மிகவும் கடினப்பட்டதையும், பிரச்னைகளை சந்தித்ததையும் தான் அறிவேன் எனவும், கருப்புப் பண நடவடிக்கைக்கு எதிரான போரில் பொதுமக்கள் பொறுமையையும் தியாகத்தையும் வெளிப்படுத்தியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையை உலகத்தின் எந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாது என கூறிய அவர், 24 லட்சம் இந்தியர்கள் மட்டுமே தங்களது வருமானம் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளதாக அறிவித்துள்ளதையும் சுட்டிகாட்டினார். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 60 நாட்களுக்கான கடன் தொகை வட்டியை அரசு ஏற்கும் எனவும், அடுத்த மூன்று மாதங்களில் 3 கோடி விவசாயிகளின் கிசான் அட்டைகள் ரூபே கார்டுகளாக மாற்றப்படும் எனவும் கூறினார்.