மோடி தலைமையிலான பி.ஜே.பி. கூட்டணி அரசுக்கு எதிராக மிக மூர்க்கமாக எதிர்கட்சிகளை திரட்டியவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு! இத்தனைக்கும் மோடியின் கூட்டணியில் ஒண்ணு மண்ணாக இருந்து, கொஞ்சு குழாவியர்தான்.
மோடி தலைமையிலான பி.ஜே.பி. கூட்டணி அரசுக்கு எதிராக மிக மூர்க்கமாக எதிர்கட்சிகளை திரட்டியவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு! இத்தனைக்கும் மோடியின் கூட்டணியில் ஒண்ணு மண்ணாக இருந்து, கொஞ்சு குழாவியர்தான்.
மோடிக்கு எதிராக படை திரட்டியதோடு மட்டுமில்லாமல் ஸ்டாலினுக்கு தேசிய அளவில் அரசியல் முக்கியத்துவத்தை உருவாக்கி தந்தது, மம்தா பானர்ஜி எனும் கூண்டுக்கிளியை ஜனரஞ்சக மனுஷியாக்கியது என நாயுடுவின் சாகசங்கள் அம்மாடியோவ் ரகங்களே.
மீண்டும் ஆந்திர முதல்வராகும் துடிப்பில் இருந்தாலும் கூட, நாயுடுகாருவுக்குன் பிரதமர் பதவி மீதும் ஒரு கண் இருக்கிறது. அதனால்தான் ஸ்டாலின் உணர்ச்சிவசப்பட்டு ‘இந்த அணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல்தான்’ என்று சொல்லிவிட்டபோது, அதற்கு எதிராக வலுவாய் காய் நகர்த்தினாலும் கூட கூட்டணி பெரிதாய் சேதமாகாமல் பார்த்துக் கொண்டவர்.
இந்நிலையில் மோடிக்கு எதிராக வாய் திறந்திருப்பவர்....”நாடு முழுவதும் பி.ஜே.பி.க்கு எதிரான அலை வீசுகிறது. இது குறித்து, மக்களிடம் தீவிரமாக பிரசாரம் செய்தோம். அதேசமயம், பி.ஜே.பி.க்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்டினோம். அடுத்து வரப்போவது, புதிய பிரதமர்தான். தெலுங்கு தேசம் கட்சியுடன் மோதி, தன்னுடைய அரசியல் செல்வாக்கை மோடி இழந்துவிட்டார், மோசமாக தோற்றுவிட்டார்.” என்று விளாசியிருக்கிறார்.
இந்நிலையில், அடுத்த பிரதமர் ராகுல்தான்! என்று கூறாமல், ‘அடுத்து வரப்போவது புதிய பிரதமர்தான்’ என நாசூக்காக சொல்லியிருப்பதன் மூலம், தான் கூட பிரதமராகலாம் என்று சூசகமாக நாயுடுகாரு சொல்லியிருப்பதாக விமர்சகர்கள் சிரிக்கின்றனர்.
ஏமிரா, என்.டி.ஆர். வாரிசுன்னா ச்சும்மாவா?