
அட்ரா சக்க...! 3 முக்கிய அதிரடி திடம் விரைவில்...மோடியின் அடுத்த ஆபரேஷன் ரெடி..!
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களைவை தேர்தலில், மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் மூன்று முக்கிய திட்டங்களை வகுத்து உள்ளாராம் பிரதமர் நரேந்திர மோடி.
இந்த மூன்று திட்டங்களின் படி, 50 கோடி மக்கள் பயனடையும்படி முக்கிய திட்டம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
அதன் படி, முதியோர் உதவித்தொகை, வாழ்நாள் காப்பீட்டுத்திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கான நலத்திட்டம்.... உள்ளிட்ட திட்டங்கள் மூலம் மக்கள் அதிக பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
மேலும், ஒப்பந்த மற்றும் நிரந்தர பணியாளார்கள் அனைவருக்கும் திட்டங்களின் பயன் கிடைக்க 15 தொழிலாளர் நலச்சட்டங்களையும் ஒருங்கிணைக்கும் சட்ட மசோதாவும் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.
இதற்கான மசோதாவும் தயார் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ஜூலை மாதம் நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத்தில் இதனை தாக்கல் செய்ய திட்டம் வகுக்கக்பட்டு உள்ளதாம்
மோடி கேர்
இதே போன்று கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல்செய்த பட்ஜெட்டில் மோடி கேர் என்ற பெயரில் மருத்துவ காப்பீட்டுத்திட்டம் அறிவிக்கப் பட்டு இருந்தது.
இந்த திட்டம் தான் உலகிலேயே மிகப்பெரிய மக்கள் நலத்திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.