மக்கள் நல கூட்டியக்கத்தின் ஆதரவு திமுகவுக்கா...? - குழப்பத்தில் கூட்டணி தலைவர்கள்

Asianet News Tamil  
Published : Mar 18, 2017, 09:31 AM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
மக்கள் நல கூட்டியக்கத்தின் ஆதரவு திமுகவுக்கா...? - குழப்பத்தில் கூட்டணி தலைவர்கள்

சுருக்கம்

makkal nala koottani supports dmk?

எந்த ஒரு சட்டமன்ற இடை தேர்தலையும் கம்யூனிஸ்ட் கட்சிகள் விட்டு கொடுப்பதில்லை. ஆனால், கடந்த 2 மாதத்துக்கு முன் நடந்த அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம்,  தஞ்சாவூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான 

தேர்தலை புறக்கணித்தது. அந்த தேர்தல்களில் பணப்பட்டுவாடா நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.

 கடந்த 2016 தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டது. எனவே, ஆர்கே நகர் இடை தேர்தலையும் புறக்கணிக்க வேண்டாம் என கம்யூனிஸ்ட்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில், அதிமுகவில் 3 அணிகளாக செயல்படுகின்றன. இதனால், அவர்களுக்குள் கடும் போட்டி நிலவுகிறது.

இதையொட்டி வாக்காளர்களுக்கு பணத்தை வாரி வழங்குவார்கள் எனவும் கருதுகின்றனர். மேலும், கடந்த தேர்தலில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த இடை தேர்தலை சந்திப்பதாக அறிவித்தது. 

ஆனால், தற்போது தனது நிலையை மாற்றி கொண்டது.

அதே நேரத்தில் பாஜகவை, தமிழகத்தில் காலூன்ற விடக் கூடாது என்பதில் மக்கள் நல கூட்டணி தலைவர்கள் பிடிவாதமாக இருக்கின்றனர். மத்திய அரசை புறக்கணித்து, மாநில கட்சியான திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பது என தற்போது முடிவு செய்துள்ளனர்.

ஆனாலும், இன்று மாலை கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். அதன் முடிவில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து அறிவிக்கப்படும் என கம்யூனிஸ்ட் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

கொங்குவை தொடர்ந்து 'டெல்டா' பெண்களின் வாக்குகளுக்கு குறி.. திமுகவின் அடுத்த மாஸ்டர் பிளான்!
'இந்தியாவில் கால் வைத்தால்'.. KKR வங்கதேச வீரருக்கு பாஜக மிரட்டல்.. ஷாருக்கான் தேசத் துரோகி.. விமர்சனம்!