டி.டி.வி.தினகரனுக்கே பாடம் கற்றுக் கொடுத்த எம்.எல்.ஏ., தெறிக்க விட்ட ரத்தினசபாபதி..!

By Thiraviaraj RMFirst Published May 12, 2019, 5:22 PM IST
Highlights

டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய இருவரது பதவியும் அவர்கள் எடுத்த சுய முடிவால் தப்பியுள்ளது.
 

டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய இருவரது பதவியும் அவர்கள் எடுத்த சுய முடிவால் தப்பியுள்ளது.

தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக விளக்கம் கேட்டு டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களான பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய மூவருக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். அப்போது இந்த நோட்டீஸ் குறித்து உச்சநீதிமன்றம் செல்ல வேண்டாம். நேரடியாக தேர்தலை சந்திக்கலாம் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். இதனால் கோபமான ரத்தினசபாபதியும், கலைச்செல்வனும் டி.டி.வியின் பேச்சை தட்டி விட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இதனால் டி.டி.வி.தினகரன் அவர்கள் இருவர் மீது கோபத்தில் இருந்துள்ளார். அதனால் தான், கள்ளக்குறிச்சி பிரபு உச்சநீதிமன்றம் செல்லாமல் இருந்து வந்தார். ஆனால் தீர்ப்பு ரத்தினசபாபதிக்கும், கலைசெல்வனுக்கும் ஆதரவாக வந்தது. இருவருடைய வழக்கின் மீது சாதகமாக தீர்ப்பு வந்ததால்தான் கள்ளக்குறிச்சி பிரபுவையும், டிடிவி.தினகரன் வழக்கு தொடர கோரியுள்ளார். அதன்படி பிரபும் வழக்கு தொடர்ந்தார். இதிலும் பிரபுவிற்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது. அதன் பின்பே டி.டி.வி.தினகரன் ரத்தினசபாபதியையும், கலைசெல்வனையும் சமாதானப்படுத்தி உள்ளார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.,க்களும் சபாநாயகரின் நோட்டீஸ் எதிராக வழக்கு தொடர்ந்த போது தீர்ப்பு எதிராகவே வந்தது. அந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் என தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் பலர் டி.டி.வி.தினகரனிடம் கூறினர். ஆனால் அதனை ஏற்காமல் தேர்தலை சந்திக்கலாம் என கூறிவிட்டார் டி.டி.வி.தினகரன். ஆகையால் 18 பேரும் மேல்முறையீடு செய்யாமல் இருந்து விட்டனர். 
  
தற்போது 3 எம்.எல்.ஏ.,க்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதால். அப்போது டி.டி.வி.தினகரனின் பேச்சை கேட்டு மேல்முறையீடு செய்யாமல் தங்களது எம்.எல்.ஏ பதவியை இழந்துவிட்டோமே என தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் இப்போது புலம்பி வருகிறார்கள் எனக் கூறப்படுகிறது. 

click me!