நிவாரணப் பொருள் ஒழுங்காக வழங்காத ரேசன் கடை ஊழியர்களுக்கு எம் .எல்.ஏ விட்ட டோஸ்..., அலறிய அதிகாரிகள்.!!

Published : Apr 10, 2020, 08:15 PM IST
நிவாரணப் பொருள்  ஒழுங்காக வழங்காத ரேசன் கடை ஊழியர்களுக்கு எம் .எல்.ஏ விட்ட டோஸ்..., அலறிய அதிகாரிகள்.!!

சுருக்கம்

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் பொதுமக்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இந்தநேரத்தில் தமிழக அரசு மக்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்க கூடிய நிவாரண பொருட்கள் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை என்ற புகாரின் அடிப்படையில் தி.மு.க எம்.எல்.ஏ டாக்டர்.பா.சரவணன் வலையங்குளம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முக்கால்வாசி பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்காத ஊழியரையும்,அதிகாரிகளுக்கும் டோஸ்விட்டார் அவர். 

T.Balamurukan

இது குறித்து எம்.எல்.ஏ சரவணன் பேசும் போது..,

"வலையங்குளம் கிராமத்தில் உள்ள ரேசன் கடை 1700 குடும்ப அட்டைதாரர்களைக் கொண்டுள்ளது. அந்த கடையில் கடந்த ஒரு வாரத்தில் 400 குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 1300 குடும்பங்களுக்கு எந்த பொருளும் வழங்கப்படவில்லை. கடை ஊழியரிடம் கேட்ட பொழுது அரசாங்கத்திடமிருந்து பொருட்கள் இன்னும் சரிவர வரவில்லை என்று கூறுகிறார். கடந்த ஒரு மாதமாக மக்கள் ஊரடங்கு உத்தரவில் இருக்கிறார்கள். திருப்பரங்குன்றம் தொகுதி உள்ள மக்கள் அதிக அளவில் அன்றாடம் கூலி தொழிலாளர்களாக இருக்கிறார்கள்.எனவே, இந்த தொகுதியில் 70% மக்களுக்கு அத்தியாவசிய தேவையான உணவு பொருட்கள் வழங்கப்படாதது கண்டனத்துக்குரியது. தி.மு.க தலைவர் ஆணைக்கிணங்க கழக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் அனைவரும் பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றோம். 

கொரோனா சாவை விட பட்டினி சாவு நடந்து விடக்கூடாது. மேற்கொண்டு,  எங்கள் தலைவர் கூறியது போல் ரேஷன் பொருட்களை உரிய நேரத்தில் உரிய முறையில் தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும். மக்கள் கையில் பணம் இல்லாமல்,தொழில் இல்லாமல் வீட்டிற்குள் முடங்கி கிடக்கிறார்கள்.ரிசர்வ் வங்கி 3தவணை தள்ளி வைப்பு அறிவித்தது. மக்கள் சந்தோஷப்பட்டார்கள்.ஆனால் அந்த அறிவிப்பு மக்களை மேலும் கடன்காரனாக்கி இருக்கிறது.கிரெடிட் கார்டு,வங்கி கடன் வாங்கியவர்கள் எல்லாம் திண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.அரசாங்கம் வட்டி தள்ளுபடி செய்யவேண்டும்,வீட்டிற்குள் முடங்கி இருக்கும் மக்களுக்கு உணவு பொருள்கள் நேரடியாக அவரவர் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும்.ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் மத்திய மாநில அரசுகள் சேர்ந்து 10ஆயிரம் வழங்க வேண்டும். மக்களுக்கான அரசு மக்கள் துன்பபடும் அவர்களுக்கு பணம் வழங்கித்தான் ஆக வேண்டும்.மக்கள் வாங்கிய அனைத்து கடன்களுக்கான வட்டியையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். 
 
PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!