மம்தாவுக்கு ஸ்டாலின் திடீர் ஆதரவு! அரசியலில் பரபரப்பு...

 
Published : Apr 25, 2018, 03:34 PM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
மம்தாவுக்கு ஸ்டாலின் திடீர் ஆதரவு! அரசியலில் பரபரப்பு...

சுருக்கம்

M.K.Stalin support to Mamata Banarjee

பாரதிய ஜனதா கட்சியின் ஜனநாயக விரோத, எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் மமதா பானர்ஜியின் முயற்சிக்கு திமுக ஆதரவு அளிக்கும். என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து, தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தங்கள் பணிகளைத் தொடங்கி விட்டன. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள், அனைத்து மாநிலங்களிலும் கூட்டணிகளை உறுதி செய்யும் பணிகளை மறைமுகமாகவும் நேரடியாகவும் தொடங்கவிட்டது.

பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மேல் அதிருப்தியில் இருக்கும் கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகளில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தீவிரமாக இறங்கியுள்ளார். 

பாஜக கூட்டணியில் இருந்து விலகிய சந்திரபாபு நாயுடுவுக்கு, மம்தா பானர்ஜி பாராட்டு தெரிவித்து ஆதரவும் அளித்தார். அவர் தொடர்ந்து 3-வது அணி குறித்து பேசி வருகிறார்.

இந்த நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், திமுக எப்போதும் பிராந்திய கட்சிகளின் ஒற்றுமைக்காகவும், வலிமையான கூட்டாட்சிக்காகவும் துணை நிற்கும். பாஜகவின் சர்வாதிகார மற்றும் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளை இணைக்கும் மம்தா பானர்ஜியின் முயற்சியை நான் ஆதரிக்கிறேன் என்றும் அதில் பதிவிட்டுள்ளார்.

திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி செயல்பட்டு வரும் நிலையில், மம்தா பானர்ஜியின் மூன்றாவது அணியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் கருத்து கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!